இந்நூலின் சிறப்பை "ஞகாரை முதலா" என்னும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவில் 'இயைபு' என்னும் செய்யுள் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக அதன் உரையாசிரியர் பேராசிரியரால், "சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன" என்று பாராட்டிக் கூறுதலானும், பிற்காலச் செஞ்சொற்புலவராக மிளிர்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளால் "கொந்தார் குழல்மணிமேகலை நூல்நுட்பம் கொள்வதெங்ஙன்" என்று சிறப்புக்காட்டிச் சொல்வதானும், அம்பிகாபதி என்னும் ஆசிரியரால் "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று நயம் பெறக் கூறப்பெறுதலானும் இந்நூலின் அரும்பெருஞ் சிறப்புப் புலனாகும்.
இத்தகைச் சிறப்புவாய்ந்த இந்நூல் நல்லிசைப்புலமை வல்லுநரான கூலவாணிகன் சாத்தனாரால் அருளிச்செய்யப்பெற்றுச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளால் கேட்கப்பெற்ற பெருமையுடையது. இதனை "மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகார முற்றும்" என ஆசிரியர் இளங்கோவடிகளார், சிலப்பதிகார நூற் கட்டுரைக்கண் உரைத்தலானும், "இளங்கோவேந்தன் அருளிக்கேட்ப, வளங்கெழு கூலவாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு" என்று இந்நூற் பதிகத்தின்கண் கூறப்பெறுதலானும் அறியலாம் இவ்வாறுபாராட்டப்பெறும் இந்நூல், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த ஏசாச்சிறப்பின் இசைவிளக்கு பெருங்குடி மாசாத்துவான் மகனான கோவலற்கு ஆடல் பாடல் அழகு என்றிம் மூவகைப் பண்பு முற்றும் நிறைந்த நாடகக்கணிகை மாதவிபால் தோன்றிய 'மணிமேகலை' என்னும் பெண்ணினல்லாளின் வரலாற்றை எடுத்துரைக்கும் பெற்றியுடையது.
இதன்கண் 'விழாவறை காதை' முதலாக 'பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை' இறுதியாக முப்பது காதைகளால் மணிமேகலையாரின் வரலாற்றை எடுத்துச் செவ்வியமுறையில் விளக்கப்பெற்றுள்ளது.
இந்நூலாசிரியர் நாவீறுபெற்ற நல்லிசைப் புலவராகலான், ஆங்காங்கே கற்பனைத்திறங்களும் சொன்னலம் பொருணலம் யாவும் ஒருங்கே கெழுமுமாறு புனையப்பெற்றுக் கற்றாரைத் தம்வழி ஈர்த்து இன்பத்தை ஈத்து அன்பும் அருளும் பிறக்க நல்லொழுக்கப் பண்பை நயக்கும் பண்பு மிக்கது; இடையிடையே கிளைக்கதைகளும், அறமுறைகளும், அறிவுரைகளும் பொதிந்து கிடப்பதால் கற்றார் நெஞ்சைக்கரைக்கும் பெற்றிமைமிக்கதாய்த் திகழுவ திந் நூலென்றால் மிகையாகாது.
இனி, இந்நூலின் கதைச்சுருக்கமும், நூலின் நயமும் ஆய்ந்து காண்போம்
மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் தன் இல்லக்கிழத்தி கண்ணகியாரோடு சிலம்புவிற்று வாணிகஞ்செய்வதற்கு மதுரைக்குச் சென்றான். கள்வனென்று ஓர் பொற்கொல்லனால் குற்றஞ்சாற்றப்பெற்றுப் பாண்டி வேந்தனால் ஆங்கே கொலையுண்டு இறந்துபடுகின்றான்.
இச்செய்தியை மாதவி அறிகின்றாள்; உடனே தன் பொருள்களையெல்லாம் போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்து துறவுக் கோலங்கொள்கின்றாள்; அறவண வடிகள்பால் அறவுரைகேட்டுப் புத்த தருமத்தை மேற்கொண்டு ஒழுகிவருவாளாயினாள். பின்னர் மணிமேகலைக்கும் அச்செய்தி எட்டுகின்றது. அப்போது அங்கே இந்திரவிழா நடைபெறுகின்றது. அதுகாலை மணிகேலை பூமாலை தொடுத்துக்கொண்டிருக்கின்றாள். தந்தை இறந்த செய்தியறிந்ததும் கண்ணீர் கலங்கத் துன்புறுகின்றாள். கண்ணினீர் பூவின் மேல் விழுந்தது; அதனால் அதன் தூய்மை கெட்டுவிடுகின்றது. அப்பால் மலர்கொய்வதற்கு மலர்வனஞ் செல்கின்றாள். மணிமேகலையின் பால் காதல் கொண்டுள்ள அவ்வூர் வேந்தன் மகன் உதயகுமரன் என்பவன், இவளைத் தொடர்கின்றான். மணிமேகலையோடு உடன் சென்றிருந்த சுதமதி என்னும் அவள் தோழி அவளை அவன் வரக்கண்டதும் ஆங்குள்ள பளிக்கறையொன்றில் அடைத்துத் தாழிட்டுவிடுகின்றாள். அப்பால் உதயகுமரன் அவளைப் பெற விழைந்து அப்பளிக்கறைக்குச் செல்ல வழிகாணாது தியங்கி நின்று 'பின்னால் சித்திராபதியால் அவளை அடையக்கூடு'மென எண்ணிச் சென்றுவிடுகின்றான். அப்போது இந்திரவிழாவைக் காண்பதற்கு வந்த மணிமேகலாதெய்வம் அவர்கட்கு அறிமுகமான ஓர் மங்கை வேடம்பூண்டு அப் பொழிலையெய்திப் பளிக்கறையிலுள்ள புத்ததேவனின் பாதபீடிகையைப் பலவாறு வாழ்த்தியது. அதுகாலைப் பகற்பொழுது கழிகின்றது ; அந்திமாலை வந்துறுகின்றது. உடனே வானத்தின்கண் திங்கண்மண்டிலந்தோன்றி வெள்ளி வெண்குடத்திலிருந்து பால்சொரிவதுபோலத் தன் தண்ணிலவைச் சொரிகின்றது. அப்போது மணிமேகலாதெய்வம் மீட்டும் புத்ததேவனது பாதபீடிகையை வணங்கிநின்றது. அப்போது சுதமதியைப் பார்த்து' 'நீ யார், இங்கே நிற்பதற்குக் காரணம் என்ன? உங்கட்குற்ற துன்பம் யாது?' என்று கேட்டது. அவள் உதயகுமரன் வந்துகூறிச் சென்ற வரலாற்றைக் கூறினாள். அதுகேட்ட மணிமேகலாதெய்வம் "உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள விருப்பம் சிறிதும் தணிந்திலது. இஃது அறவோர் வனமென்று கருதிவிட்டு நீங்கினானாயினும், இதனைக் கடந்து நீயிர் சென்றால், புறத்துள்ள தெருவின்கண் வந்து உட்படுத்துவான். ஆகவே இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேல்திசை இடத்ததாகிய சிறிய வாயில்வழியாகச் சென்று மாதவர் உறையும் சக்கர வாளக்கோட்டத்தை எய்தின் யாதொரு துன்பமும் அணுகாது; அங்கே செல்லுமின்," என்று கூறியது. அப்போது சுதமதி அதற்குச் சக்கர வாளக்கோட்டம் என்னும் பெயர் கூறுதற்குக் காரணங்கேட்ப, மணி மேகலாதெய்வம் அதன் வரலாற்றைக் கூறச் சுதமதி தூங்குதலுற்றாள். அதுகாலை மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவியெடுத்து, வான்வழியே முப்பதுயோசனை தொலைவு தெற்கே சென்று கடல் சூழ்ந்த மணிபல்லவம் என்னும்தீவில் அவளைவைத்துவிட்டுச்சென்றது. 'கங்குல் கழியில் என் கையகத்தா,' ளென ஏங்கித் துயிலாமல் இருந்த உதயகுமரன் கனவில் மணிமேகலாதெய்வம் தோன்றி, 'மன்னவன் மகனே! நீ தவத்திறம் பூண்டாள்தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக,' என அறிவுரை கூறிவிட்டு உவவனஞ்சென்று ஆங்கே தூங்குகின்ற சுதமதியைத் துயில்நீக்கி 'யான் மணிமேகலாதெய்வம்; இங்கே இந்திரவிழாக் காண்டற்குப் போந்தேன்; நீ அஞ்சாதே; மணிமேகலைக்குப் புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது. பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள். அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள். புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று. அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன் |
| |
புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.
பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.
அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.
புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.
அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்
புத்தன் அறநெறியிற் செல்லுதற்குரிய நற்காலம் வந்துற்றது ; அவளை நான் எடுத்துச்சென்று மணிபல்லவத் தீவின்கண் வைத்துள்ளேன் ; இற்றைக்கு ஏழாம்நாள் இவண் வந்துசேருவாள்; அவள் வரும் பொழுது பற்பல வியத்தகு செயல்கள் நிகழும்; மாதவிக்குச் சொல்க,' என்று கூறிச் சென்றது.
பின்பு சுதமதி எழுந்து மணிமேகலையின் பிரிவுக்கு வருந்தினாள். அவ்வனத்தின் மதில்வழியாகச் சக்கரவாளக்கோட்டத்தையடைந்து அங்குள்ள உலகவறவியின் ஒருபக்கத்தில் இருந்தாள்.
அப்பொழுது அங்குக் கந்தினை இடமாகக்கொண்டுறைகின்ற தெய்வப் பாவையானது, சுதமதி மயங்குமாறு அவளின் முற்பிறப்பின் வரலாற்றைக் கூறி அவளை அழைத்து 'மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாற்றை அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாள் இரவில் இந்நகர்க்கண் வந்துறுவாள் ; அவள் பிரிவுக்கு நீ அஞ்சாதே,' என்று சொல்லிற்று. அதுகேட்டு நெஞ்சம் திடுக்குற்ற சுதமதி, அன்று இரவு முழுதும் அவ்விடத்திலேயே இருந்து, ஞாயிறு தோன்றியவுடன் எழுந்து சென்று மாதவியை அடைந்து, முன்னாள் இரவில் நிக.ழ்ந்தவற்றை அவளிடம் கூறியவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகப்பாம்பு போல் துன்பத்துடன் இருந்தாள். சுதமதி இன்னுயிர் இழந்த யாக்கை போலச் செயலற்றிருந்தாள்.
புகார்நகரில் சுதமதி செயலற்றிருப்ப, மணிபல்லவத்தில் கடலருகே மணலில் தூங்கிய மணிமேகலை துயிலுணர்ந்தெழுந்து தான் முன் காணப் பெறாத புதிய பொருள்களையே கண்டாளாதலின், அவைகளைப் பார்த்துத் திகைப்புற்றாள். அதுகாலைக் கதிரவன் தோன்றினான். தோன்றியவுடன், 'இவ்விடம் உவவனத்தில் நாம் கண்டறியாத ஒரு பகுதியாக இருத்தல் கூடுமோ? இது கனவோ ! நனவோ ! சுதமதி ! நீ யாங்கொளித்தாய் ! ஒரு மறுமொழி கூறு ; இருள் நீங்கிற்று ; மாதவி வருந்துவள் ; நான் தனியே இவண் இருக்க அஞ்சுகின்றேன் விரைந்து வருவாயாக,' என்று கூறிக்கொண்டு, நீர்த்துறைகளிலும் மணற்குன்றுகளிலும் சென்று அவளைத் தேடி ஒருவரையும் காணாதவளாய், அழுது கொண்டிருப்பவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டுக், கண்டு வணங்கினோர்க்குத் தம் பழம்பிறப்பை அறிவிப்பதாகிய புத்தபீடிகை தோன்றிற்று.
அதைக் கண்டவுடன் மணிமேகலை வியப்புற்றாள் ; தன்னையறியாது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அதனை மும்முறை வலம் வந்து பணிந்து எழுந்தாள் ; அதன் காட்சியால் தன் பழம் பிறப்பின் நிகழ்ச்சிகளை உணர்ந்தாள். அப்போது மணிமேகலா தெய்வம் வானினின்றும், இறங்கியது. அது புத்தபீடிகையைப் புத்தராகவே மதித்து வாழ்த்தி வலம்வந்து வணங்கியது. வணங்கிய அத் தெய்வத்தை மணிமேகலை வணங்கி, 'உன் திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கே உள்ளனன்,' என்று கேட்டாள். கேட்டலும் அத்தெய்வம், "இலக்குமி கேட்பாயாக ; நீ ஒருநாள் உன் கணவன் இராகுலனோடு ஒரு பொழிலில் ஊடியிருந்தாய்; அவன் அத்துனி நீங்குதற் பொருட்டு உன் அடியை வணங்கினான் ; அப்போது சாது சக்கரனென்னும் பௌத்தசாரண முனிவன், விசும்பினின்றும் கீழிறங்கி வந்தான் ; நீ அவனைக் கண்டு உடல் நடுங்கிப் பணிந்தாய்; அதுகண்ட இராகுலன், 'இங்கு வந்தவன் யார்?' என்று சினந்துரைக்க, அவன் வாயைப் பொத்தி 'நீ இவரைத் துதித்திடு,' என்று கூறி அவனோடு அம்முனிவன்
அடிகளை வணங்கி அமுது செய்க,' என்று வேண்டி அமுது கொணர்ந்து உண்பித்தாய். அவன் உண்டருளிய அறம், நின் பிறப்பை ஒழிக்கும். அவ் இராகுலனே உதயகுமரன்; அதனால்தான் அவன் உன்னை விரும்பினான் ; உன் மனமும் அவனை மிக விரும்பியது ; அப் பற்றினை மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து உன்னை இத் தீவிற்குக் கொணர்ந்து வைத்து இப் புத்தபீடிகையைக் காட்டினேன்; முற்பிறப்பில் உனக்குத் தவ்வையராக இருந்த தாரை, வீரை யென்னும் இருவரும் மாதவியும் சுதமதியுமாகப் பிறந்து நின்னுடன் ஒன்றுபட்டனர். நீ பழம் பிறப்பும், அறத்தின் இயல்பும் அறிந்து கொண்டனை. பிற சமயக் கணக்கர்களின் கொள்கைகளையும் இனிமேற் கேட்பாய்; கேட்குங்கால் நீ இளம் பெண் என்று கருதி அவர் தத்தம் சமயக் கொள்கைகளைக் கூறார்; ஆதலான், நீ அதுகாலை வேற்றுருக் கொள்ளுதல் வேண்டும்," என்று கூறி வேற்றுரு வெய்தும் மந்திரமொழியும் வானிற்செல்வதற்கு ஆக்கும் மந்திர மொழியும் அவளுக்கு உரைத்தது.
அப்பால், "நீ புத்தர் அருளிய அறநெறியை அடைதல் உறுதி ; பீடிகையை வணங்கி நின் நகர்க்கண் செல்லுக," என்று எழுந்து நின்று, மீட்டும் கீழிறங்கி வந்து, "மக்கள் யாக்கை உணவின் பிண்டம், இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்," என்று அதனை அவட்கு அருளிச் செய்து, வானில் எழுந்து சென்றது.
மணிமேகலா தெய்வம் சென்றபின், மணிமேகலை ஆங்குள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வந்தாள். அப்போது தீவதிலகை யென்பாள் தோன்றினாள் அவள் மணிமேகலையைப் பார்த்து 'இங்கே தனியே வந்த நீ யார்?' என்றாள். அதற்கு மணிமேகலை, தான் வந்த வரலாற்றைக் கூறிவிட்டு 'நீ யார்?' என்று தீவதிலகையை வினாவினாள்.
அவள் "இத்தீவிற்கு அயலிலுள்ள இரத்தின தீவத்தில் உயர்ந்து விளங்குகின்ற சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவன் திருவடிப் படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்கு வந்தேன் ; வந்தது முதல், இந்திரன் ஏவலால், இப் பீடிகையைக் காத்துக் கொண்டிருக்கிறேன். என் பெயர் தீவதிலகை." என்று கூறி, புத்த தேவர் அருள்நெறியில் நடப்போரே இதனைக் காண்டற்கு உரியர். கண்டவர் தம் பழம் பிறப்பை உணர்வார்; நீ அவ்வாறானால், மிகப் பெரியை; இப் பீடிகைக்குமுன் 'கோமுகி' என்னும் பொய்கை யொன்று உளது. அதனுள்ளிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; இன்று அந்நாளே ; தோன்றும் காலமும் இதுவே ; இப்போழுது அது நின்கையில் வரும் போலும். அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் அதன் வரலாற்றை அறவண அடிகள்பால் நின்னூரிற் கேட்பாய்," என்று கூறினாள்.
மணிமேகலை அதை விரும்பி., பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையினுள்ளிருந்து, மணிமேகலையின் கையில் வந்தடைந்தது. உடனே அவள் மகிழ்ந்து, புத்ததேவரைப் பலவாறு வாழ்த்தித்தொழுதாள். அப்போது தீவதிலகை மணிமேகலைக்கு உயிர்களுக்கு உண்டாகும் பசிப் பிணியின் கொடுமையையும் அதை நீக்குவோர்க்கு உண்டாம் பெருமையையும் கூறி; 'இனி நீ உணவளித்து உயிர்களைப் பாதுகாக்கும்
அறத்தைச் செய்வாய்' என்றாள். உடனே மணிமேகலை 'அவ்வாறே செய்வே,'னென்று கூறித் தீவதிலகையை வணங்கிப் புத்த பீடிகையைத் தொழுது வலங்கொண்டு பாத்திரத்தைக் கையிலேந்தி வானிலே எழுந்து சென்று, புகாரில் தன்னைக் காணாமல் வருந்திநிற்கும் சுதமதியையும், மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையுமாறு அவர்களின் முற்பிறப்பை அறிவித்து, "மக்கள் யாக்கையிற் பெறுதற்குரிய தவ வழியை இனி அறவண அடிகள்பாற் பெறக்கடவீர்; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் ஆகும்; இதனைத் தொழுமின்," என்று சொல்லி அதனை அன்புடன் தொழுத அவர்களோடு, அறவணவடிகளைக் காண்டற்குச் சென்றனள்.
சென்ற மணிமேகலை அறவணவடிகள் இருக்குமிடத்தை யடைந்தாள் ; அவர் திருவடியை மும்முறை வணங்கினாள் ; தான் உவவனஞ் சென்றது முதல் அட்சயபாத்திரம் பெற்றதுவரை யாவற்றையும் தெரிவித்தாள். அவர் கேட்டு மகிழ்ந்தனர் ; பின், முற்பிறப்பிலே துச்சயராசன் மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும், சுதமதியுமான வரலாற்றை அவர்கட்கு உரைத்துப் பின்னும் மணிமேகலையைப் பார்த்து, 'இவ்வுலகில் புத்ததேவன் அருளிய அறங்கள் குறைந்தன; மறங்கள் மிகுந்தன; சக்கரவாளத்திலுள்ள தேவர்களின் வேண்டுகோளினால், ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் துடித லோகத்திலுள்ள தேவன், இவ் வுலகிலே தோற்றஞ்செய்வான்; பின்பு யாவர்க்கும் அருளறத்தில் மனஞ்செல்லும்; புத்தர் தோன்றுங் காலத்தில், ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியனவும், உயிர்களும் இன்னின்னவாறு நலத்துடன் விளங்கும்,' என்று கூறிப் பின்னரும் 'இந் நகரில் உன்னால் சில நலங்கள் நிகழ்வனவாம், அவை நிகழ்ந்த பின்பல்லாமல், யான் கூறும் அறவுரை, நின் மனத்திற் பொருந்தாது. இவ் விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வணங்கினராதலின், பின்னர் உன்னோடு கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினின்றும் விடுபட்டு வீட்டுநெறிச்செல்வர். ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபியை நீபெற்றனை; மக்கள், தேவர் என்பார்க்கு ஏற்ற தன்மையில் செய்யும் அறம், உயிர்களின் பசிப்பிணி தீர்த்தலொன்றே,' என்ற நல்ல அறவுரை கூறினார். மணிமேகலையும் உயிர்களின் பசித்துன்பம் நீங்கப் பாத்திரத்தை எடுத்தாள்.
அப்போது அறவண அடிகள், 'அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கேட்பாயாக,' வென்று கூறி அவன் வரலாற்றை விரித்துரைத்தார். பின்பு, 'காவிரியாறானது மாறாமல் நீர் பெருகி நாட்டை வளம்பெறச்செய்தாலும்உயிர்கள் எக்காரணத்தாலோ வருந்துகின்றன. ஆதலால், பாற்கடல் தந்த அமிழ்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதுபோல், மிகப் பயன்படுவதான இவ்வமுதசுரபியைச் சும்மா வைத்திருத்தல் தகுதியன்று,' என்று கூறினர்.
அதுகேட்ட மணிமேகலை அவரை வணங்கித் தொழுது அப்போதே பிக்குணிக் கோலம்பூண்டு அப் பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந் தெருவிற் போய்ச் சேர்ந்தாள்; மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்தனர். அப்பொழுது மணிமேகலை, "கற்புடைய மாதர் இடும் ஐயத்தையே முதலில் ஏற்பது தகுதி," என்று சொல்ல, காயசண்டிகை, "கற்புடைய மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்," என்று அவட்குக் கூறினாள்.
அவ்வாறு கூறி, காயசண்டிகை, ஆதிரையின் வரலாற்றை விரித்துரைத்து, 'அவன் கற்புமிக்கவளாதலால், அவள் கையில் முதலில்
ஐயம் கொள்க,' என்று சொன்னாள்; மணிமேகலை, ஆதிரைமனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப் பாவைபோல் நின்றாள். நின்றவுடன், ஆதிரை தொழுது வலங்கொண்டு அமுதசுரபியின் உள்ளிடம் நிறைய, 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக.' எனக் கூறி, ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை அள்ளியிட்டாள்.
ஆதிரையளித்த பிச்சையை முதலில் ஏற்று அமுதசுரபியிலுள்ள சோற்றுத்திரளையைப் பசியால் வாடிய பலர்க்கும் வழங்கினாள்; அது வழங்குந்தோறும் குறையாமல் வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அதுகண்ட காயசண்டிகை, 'அன்னையே! என் தீராப் பசியையும் தீர்த்தருளுக,' என்று வேண்டி நின்றாள். உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒருபிடி அமுதை எடுத்து அவள் கையில் இட்டாள். அதனை உண்டு பசிதீர்ந்த காயசண்டிகை, தனக்குக் கொடு நோய் வந்த வரலாற்றைக் கூறித், தன் பசிதீர்த்தமைக்கு நன்றிபாராட்டி, 'நான் என் நாட்டிற்குச் செல்வேன்; நீ இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு; அதில் பலரும் வந்து புகுதற்காக எப்பொழுதும் வாயிற்கதவு திறந்துள்ள 'உலகவறவி' என்னும் அம்பலம் ஒன்றுளது. அதில் மிக்க பசியுற்றோர், பிணியுற்றோர் முதிலியோர், உணவிடுவோரை எதிர்பார்த்திருப்பார். ஆதலின், நீ ஆங்கே செல்க,' என்று கூறிவிட்டு அவள் தன் ஊர்க்குச் சென்றனள்.
பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச்சென்று உலகவறவியை அடைந்து அதனை மும்முறை வலம்வந்து பணிந்து அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி அமுதசுரபியுடன் தோன்றி, "இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும்; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும்வருக," என்று கூறப், பலரும்வந்து உண்பாராயினர். ஆதலின், அவ்வம்பலத்தில் உண்ணும் ஒலிமிகுந்தது.
மணிமேகலை பிக்குணிக்கோலத்துடன் ஐயக்கடிஞைகொண்டு ஐயமேற்று, உலகவறவியிற் சென்றாளென்பதைக் கேள்வியுற்ற சித்திராபதி மனங்கொதித்துப் பெருமூச்செறிந்து கலங்கி, "மணிமேகலையின் இச்செயலை ஒழிப்பேன்," என எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தையர் எல்லோரையும் பார்த்து, "கோவலன் இறந்ததுகேட்டு மாதவியானவள் முனிவர்கள் பள்ளியை அடைந்து தவக்கோலம் பூண்டிருத்தல் நகைக்கத்தக்கதே; நம் குலவொழுக்கத்துக்குத் தவக்கோலம் ஒவ்வாதது; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவளைப் பலநாட்களாக விரும்பியிருக்கும் உதயகுமரனால், அவனது தேரில் ஏற்றுவித்து வருவேன்; அவ்வாறு செய்யேனானால், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கல்லைத் தலைமேலேற்றிக்கொண்டு நாடகவரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடகமகளிர்போல, இனி நான், நாடகக் கணிகையர் மனையிடத்துச் செல்லேனாகுக," என்றுசூளுரைகூறி உதயகுமரன் இருப்பிடத்தை வந்து சேர்ந்து அவனை வாழ்த்தி வணங்கி, மணிமேகலை உலகவறவியை அடைந்த செய்தியைக் கூற, அவன் மணிமேகலயை உவவனத்திற் கண்டது முதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவளிடமுள்ள சிறப்புத்தன்மையைப் பாராட்டினான். சித்திராபதி அவன் உள்ளம் திரியமொழிகள் பலவற்றைக் கூறினாள் ; அவன் மனம் மாற்றமுற்றுத் தேரேறி உலகவறவியை அடைந்து பலர்க்கும் உண வளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற்சென்று, "நீ தவக்கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினவினான். மணிமேகலை, "பழம்பிறப்பில் கணவனாக இருந்த இவனை வணங்குதல் முறையாகும்," என்று எண்ணி வணங்கி,
"மணிமேகலை, "பழம்பிறப்பில் கணவனாக இருந்த இவனை வணங்குதல் முறையாகும்," என்று எண்ணி வணங்கி,..............."
பதிலளிநீக்குதயவு செய்து இதன் தொடர்ச்சியை உடனே பதிவு செய்க. பின் எனது சில ஐயங்களுக்கு பதில் தருக!!