வியாழன், 8 டிசம்பர், 2011

கலித்தொகை


எ - து: 1என்று யான்சொன்ன அனையவை செய்த நன்மைகளை நினைத்து அவை கெடாமற்பாதுகாத்துப் பின்னர் நீ ஆராய்ந்து தேடுகின்றவற்றை ஆராய்ந்துபார். அக்கல்வியாலுண்டாம் வளப்பமோ இவ்விடத்தே யிருந்து நாடோறுஞ் செய்துகொள்ளுஞ் செயலாயிருக்கும்; அக்கல்வி, முளையையொத்த நிரையினையுடைய முறுவலையுடையாருடைய திரளுள்ளே உயர்த்தாராய்ந்த இவளுடைய (1) இளமை போனபின்பு அவ்விளமையுந் தருவதொன்றோ? எ - று.
அனையவையென்றது, நிறத்தையும் முகத்தையும் கண்ணையும்.
வளமையோவென்னும் ஓகாரம் இழிவுசிறப்பு; இளமையுமென்னும் உம்மை சிறப்பு; தருவதோவென்னும் ஓகாரம் எதிர்மறை.
"ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன" (2) இதனா னுணர்க.
இது சுரிதகம்.
இதனால், தோழிக்கு இழிவுதோன்றிற்று; தலைவற்கு அசைவு பிறந்தது.
இஃது ஒன்பதடித் தரவும் நான்கடித் தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (14)
(16).(3) பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க
வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர
வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி
நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்;

வருதற்கு "இளமையுந் தருவதோ விறந்த பின்னே" என்பது மேற்கோள் ; தொல். வினை. சூ. 31. கல்; 32. நச்.
1. (அ) இளமை யென்பது குழவிப் பருவமொழிந்த தாகிய யௌவன மென்னும் பொருளில் வந்ததென்பதற்கு நச். ‘இளமையுந் தருவதோ’ என்பதை (சீவக. 165) மேற்கோள் காட்டியிருப்பதும் (ஆ) இளமை யாவது காமச்செவ்வி நிகழ்வதொருகாலம். (தொல். கிளவி. 57.) என விளக்கியிருப்பதும். ஈண்டு அறிதற்பாலன. (இ) "இறந்தபின் இளமை வாராது" என்பது தொல். வினை. சூ. 35 சே.
2. தொல். அகத். சூ. 26.
3. இச்செய்யுள், நான்கடித்தரவும் நான்கடியான் மூன்றுதாழிசையும் தனிச்சொல்லும் ஐந்தடிச் சுரிதகமும் ஒத்தாழிசைக் கலிப்பாவில் வந்ததற்கும் (தொல். செய். சூ. 131 ‘போக்கியல்’ இளம்; சூ. 137. பே. நச்.) தலைவியாற்றாமைகண்டுழிப் பிரிந்ததலைவன் மீண்டு வந்தானெனத் தோழி கூறியதற்கும். (தொல். அகத். சூ. 45. நச்.) மேற்கோள்.
(பிரதிபேதம்) 1 அனையவை.
5தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக்
கன்மிசை யுருப்பறக் கனைதுளி சிதறென
வின்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ;
9புனையிழா யீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய வாரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ;
13ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி
னளியொரீஇக் காதல ரகன்றேகு மாரிடை
முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ;
எனவாங்கு;
18செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி
வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினா
ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென
வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே.
இதுதலைமகன் பொருள்வயிற்பிரிந்த இடத்து அவன் போகியகாட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள் அவர்பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல்நங்கற்புக்கு இயைவதோ வென, கேட்ட தோழி அவ்வாற்றானேமீண்டனர் நீ கவலவேண்டா வெனக் கூறியது.
இதன் பொருள்.

(1)
பாடின்றிப்பசந்தகண் பைதல பனிமல்க
வாடுபு வனப்போடிவணங்கிறை வளையூர
வாடெழி 1லழிவஞ்சா (2)தகன்றவர் திறத்தினி
நாடுங்கா னினைப்பதொன்றுடையேன்மன் னதுவுந்தான்

1. (அ)செய்புவென்னும் வினையெச்சம் நிகழ்காலங் குறித்து வருதற்கு ‘வாடுபுவனப்போடி வணங்கிறை வளையூர’ என்பது மேற்கோள்.தொல். வினை. சூ. 33. தெய்; 31 நச்; இ - வி. சூ. 246 (ஆ) ‘வாடுபுவனப்போடி’கலி. (132 :14)
2. காலீற்றுவினையெச்சம் நிகழ்வும் எதிர்வும் பற்றிவருதற்கு ‘அகன்றவர்
(பிரதிபேதம்) 1 அழிபஞ்சாதகன்றவர்.எ - து: துயிலின்றிப் பசந்த கண்கள் வருத்தத்தை யுடையவாய் நீர்மல்க நிறம்வாடி அழகு கெடுகையினாலே வளைகள் வணங்கின முன் கையினின்றுங் கழல வெற்றியையுடைய அழகழிவுக்கு அஞ்சாதேபிரிந்தவர் கூற்றில் இப்பொழுது செய்வதாக நினைப்பதொரு காரியமுடையேன்; அத்தாற் பெற்றதென்? அக்காரியந்தானும் ஆராயுங்கால் நங்கற்பிற்குப் பொருந்துவதன்றாய் இராநின்றது; எ - று.
இது தரவு.
(5)(1) தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக்
கன்மிசை 1யுருப்பறக் கனைதுளி சிதறென
வின்னிசை (2) யெழிலியை யிரப்பவு மியைவதோ
எ - து: நங்காதலர் யாம் இயற்கை நலமுங் கெட்டு இவ்விடத்தே, யிருந்து வருத்தத்திலே அழுந்தும்படி நம்மைக் கைவிட்டுப் பின்னர் நினையாராய்ப் பொருண்மேல் அன்பு நெருங்கி நம்மேல் அன்பைத் துறந்துபோம் அரியவழியிடத்திற் கல்லின்மேல் உண்டான வெப்பம் நீங்கும்படி செறிந்த துளியைச் சிதறுவாயாக வென்று பராய் இனி்ய ஓசையை யுடைய (3) மேகத்திற்கு உரிய ஞாயிற்றை இரத்தல்செய்யவும் 2நங்கற்பிற்கு இயைவ தொருகாரியமோ? அல்லவே; எ - று.

திறத்தினி நாடுங்கால்' என்பது கேற்கோள். தொல். வினை. சூ. 32. சே; நச்; தொல். எச்ச. சூ. 19. நச்.
1. “தொன்னலந்................காமுறலியைவதோ" என்பதனொடு "ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த், தண்மழை தலைய லாகுக நந்நீத்துச், சுடர்வாய் நெடுவேற் காளையொடு, மடமாவரிவை போகியசுரனே" குறுந். 378. "சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக், கானங் கடுமை நீங்குக, மானுண் கண்ணிபோகிய நெறியே" தமிழ்நெறி, என்பவை ஒருவாறு ஒப்பு நோக்கற் பாலன. ‘தொன்னலம்’ கலி. 27 : 14; 77 : 13; 100 : 20; 124 : 11.
2. எழிலி கனலி வளிதருசெல்வ னென்பன "வீறுமழை வெய்யசுடர் வீசுவளி யென்றிவை தமக்குதவுகைம், மாறு முளதோ" "பொழி யருள் வலக்கணின்று புரவியே ழுடையோன் காற்றுச், சுழிபுனலு மிழுமேகந் தோன்றின" எனச் சேர்த்துக் கூறப்பெறுதல் காண்க.
3. (அ) "வெய்ய வன்கணுள தாயவன் மறைந்திட வெழு மேகமே" மோகவதைப்பாணி. (ஆ) "பரிதி யுலகமெல்லாம், விருப்பவிர் மேகம் விளைப்பதன்றோ" தணிகை. களவு 492. (இ) "தினஞ் செய்வோன்.........பைங்கூழ்கள,் கரிந்தன தளிர்ப்ப வெள்ளி வீழன்ன கணமழை பொழிவது கடுப்ப" நைட. அன்னத்தைத். 5.
(பிரதிபேதம்) 1 உருப்பிற, 2 கற்பிற்கு.
(9)(1)னையிழா யீங்குநாம் புலம்புறப்பொருள்வெஃகிமுனையென்னார் காதலர் முன்னிய 1வாரிடைச்
(2)சினைவாடச்சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க்கனலியைக் காமுற லியைவதோ
எ - து: புனைந்த பூணினையுடையாய்! காதலர் இவ்விடத்தேயிருந்து நாந் தனிமையுறும்படி பொருளை விரும்பிப் பகைப்புலமென்று கருதாராய்ப்போதற்கு 2நினைந்த அரியவழியிடத்தில் மரக்கொம்புகள் வாடும்படியாகச் சிறக்கும் நின் (3) சினந் தணிவதாகவென்று பரவிச் செறிந்த கதிரையுடைய ஞாயிற்றை நாம்வேண்டிக்கோடலும் நங்கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவோ; எ-று.
(4) நாமென்னும் படர்க்கையுளப்பாடு இடவழுவமைதி; தணிந்தீக, வியங்கோட் டிரிசொல்; விகாரமாய் நின்றது.
13ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி
னளியொரீஇக்காதல ரகன்றேகு மாரிடை

1. ‘புனையிழாய்....................காமுற லியைவதோ’ என்பது தெய்வம் பராயதற்கு மேற்கோள். தொல். அகத். சூ. 45. ‘எஞ்சியோர்க்கும்’ இளம்.
2. (அ) "பாலைக்கு, ‘சினை, வாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக், கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’ எனவும், ‘வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ’ எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றியமழையினையுங் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத்தெய்வத்திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்குகால் அங்கி ஆதித்தன்கட் கொடுக்கு மென்பது வேத முடிபாகலின், ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொதுவென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற்பொருளோடுகூட்டிக் கூறியது தெய்வ வழிபாட்டுமரபு இதுவே, ஒழிந்தது மரபன்று என்றற்கு. எனவே அவ்வந்நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயிற்று" என்பது (தொல். அகத். சூ. 5.நச்) காணப்படுவது. (ஆ) இப்பகுதியைத் தெய்வ மஞ்சலுக்கு மேற்கோள் காட்டித் தெய்வத்திறம் நோக்கித் தெருமந்த தென்பர் (தொல்.மெய்ப். சூ. 24.) பேராசிரியர். இ - வி. நூலாரும் தெய்வ மஞ்சலுக்கு மேற்கோள் காட்டுவர். இ - வி. சூ. 580.
3. சினம் என்றது வெம்மையை, ‘காய்சினந் தவிராது கடலூர் பெழுதரு, ஞாயிறு’ புறம். 59. என்பதன் உரையைப் பார்க்க, ‘கதிர் சினந்தணிந்த கையறுமாலை’ என்பது குறுந். 387.
4. யாமென்பது படர்க்கை யுளப்பாடென்றும் நாமென்பது முன்னிலை யுளப்பாடென்றும் தொல்காப்பிய வுரையில் கல்லாடர் கூறுதலால் இங்கு மூலம் உரை விசேடவுரை மூன்றிலு முள்ள நாமென்பது யாமென இருக்க வேண்டியது போலும்.
(பிரதிபேதம்) 1 ஆற்றிடை, 2 நினைந்தவழி.
முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ
எ - து:ஒளியினையுடைத்தாகிய பூணினையுடையாய்! காதலர் இவ்விடத்தேயிருந்து நாம் வருத்தமிகும்படி நம்மிடத்து அளித்தலை நீங்கிப் பொருளிடத்தே வேட்கை சென்று நம்மை அகன்றுபோம் அரிய வழியிடத்து உலர்ந்த சிறுதூறுகளிலே தங்கி வந்த வெப்பமாறி அவன்மேலே சேர்வாயாக வென்று பரவிக் காற்றைத் தருகின்ற ஞாயிற்றினை வாழ்த்துதலைச் செய்யவும் நங் கற்பிற்கு இயைவதொரு காரியமோ? அல்லவே; எ - று.
மழையையுங் காற்றையுந் தருகின்ற (1) ஞாயிறு பாலைக்குத் தெய்வ மாயினமை "மாயோன் மேய" என்னும் (2) சூத்திரத்தானுணர்க.
இவை மூன்றும், தாழிசை.
எனவாங்கு
எ - து: என்றுசொல்லி; எ - று.
ஆங்கு அசை.
இது தனிச்சொல்.
18(3) செய்பொருட்சிறப்பெண்ணிச் 1செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறனோக்கித் தெருமரறேமொழி
(4)வறனோடின்வையகத்து (5) வான்றருங் கற்பினா
ணிறனோடிப்பசப்பூர்த லுண்டென
வறனோடி விலங்கின்றவராள்வினைத் திறத்தே

1. (அ) பக்கம் 102: 2- ஆம் குறிப்புள் (அ) என்பதன் பின்னுள்ளது இங்கே ஆராய்தற்பாலது. (ஆ) பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வமென்பர், அடியார்க்கு நல்லார். சிலப். ப. 18.
2. தொல்.அகத். சூ. 5.
3. "வினையின் றொகுதி காலத்தியலும்" என்னுஞ் சூத்திரத்து, ‘செய்பொருட்சிறப்பெண்ணி’ என்பதைமேற்கோள்காட்டி, ‘பொருட்கேற்ற காலத்தை விரிக்க’ என்பர் நச்சினார்க்கினியர். தொல். எச்ச. சூ. 19.
4. ‘வறனோ டுலகின்’ மணி. 15: 53.
5. (அ) "அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே" கலி. 39: 6. (ஆ) ”தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யு மழை" குறள். 55. (இ) "பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றும், திங்கண்மும் மாரிக்கும் வித்து." திரிகடுகம். 98. (ஈ) "வான்றருங் கற்பின் மனையுறைமகளிரிற், றான்றனி யோங்கிய தகைமைய ளன்றோ" மணி. 15: 77 - 8. (உ) "பொழிமழை தரூஉ, மரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிரும்" மணி. 16: 49 - 50. (ஊ) "மண்டினி ஞாலத்து மழை
(பிரதிபேதம்) 1 செல்வர் மாட்டு.எ - து: தேமொழீ! 1இத்தன்மையவாகிய மற்றத் தெய்வங்களினுடைய கூறுபாடுகளையும் மனத்தான் வேண்டிக்கொள்ளக்கருதித் தேடுகின்ற (1) பொருளான் உண்டாஞ் சிறப்புக்களை நினைத்துப் போகின்றவரிடத்து மனஞ் சுழலாதே கொள்; வற்கடமான காலத்தாலே வையங்கெட்டதாகில் அவ்வையத்திடத்தே மழையைப் பெய்விக்குங் கற்பினையுடையாளுடைய நிறங்கெட்டுப் பசப்புப் பரத்தலுண்டாமென்று கருதி அவருடைய முயற்சியிடத்தே அறக்கடவுள் விரைந்து சென்று விலக்கிற்று; 2இனிவருந்தல்; எ - று.
3இது (2) தங் குலதெய்வமன்றி எல்லார்க்கும் பொதுவாதலிற் கற்பிற்கு இயைவதோவென்றாள். அது "தெய்வமஞ்சல்" (3) என்பதனான் உணர்க. இது "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, 4வன்புறை குறித்ததவிர்ச்சியாகும்" (4) என்பதனால் தலைவன் செலவழுங்கினமை கூறிற்று.
இது சுரிதகம்.
இதனால், தலைவிக்குப் புணர்வென்னும் உவகையும் தலைவற்கு அசைவும் பிறந்தன.
இது "தரவே தானு நாலடி யிழிபாய்" (5) எனச் சிறுமைக்கு எல்லை கூறிய நான்கடித்தரவிற்கு "இடைநிலைப்பாட்டே, தரவகப்பட்ட மரபின தென்ப" (6) என்றதன்கண் 5மரபினதென்ற இலேசால் நான்கடியாகிய

வளந் தரூஉம், பெண்டி ராயிற் பிறர்நெஞ்சுபுகாஅர்" (எ) "வான்றருங் கற்பின் மனையறம் பட்டேன்" (ஏ) "ஆங்கவை யொழிகுவை யாயினாயிழை, யோங்கிரு வானத்து மழையுநின் மொழியது" மணி. 22. 45 - 6, 53, 68 - 9. (ஐ) "வானம் பொய்யாது.....................பத்தினிப் பெண்டிரிருந்த நாடு." சிலப். 15: 145 -7.) (ஒ) "பீடு சான்மழை பெய்யெனப் பெய்தலும்,..........................பாடுசான்மிகு பத்தினிக் காவதே." வளையாபதி. (ஓ) "அன்னவர் கற்பினின்றன காலமாரியே" கம்ப. நாட்டுப். 59 (ஒள) "கற்பினர்த மெய்யுரையி னிற்கு, மீண்டையுள தெய்வதமு மாமுகிலும்" கந்த. மார்க்கண். 47. (ஃ) "இவளிடம் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே" வெங்கைக்கோவை. 376. (அஅ) "சாரதை யென்பவ, ளினக்கனப்பெய லீட்டுமெய்க் கற்பினாள்" விநாயக. மகோற்கடர். 5. "மாரிக்கு வித்தன்ன மடமாதர் கற்போங்கி மல்கும்" திருவாப்ப. இடவாபுர. 4.
1. பொருள். சிறப்புக்குக் காரண மென்பதை இந்நூற்பக்கம் 72: 1. 91 : 2. குறிப்புக்களால் அறிக.
2. "திருவாக்குந் தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்றவழிபாடு, செய்வதே பெண்டிர் சிறப்பு" என்பதும் குல தெய்வ வழிபாட்டைக் குறிப்பதாம்.
3. தொல்.மெய்ப் சூ 24.
4. தொல். கற்பி. சூ. 44.
5. தொல். செய். சூ. 133.
6. தொல். செய். சூ. 134.
(பிரதிபேதம்) 1 இத்தன்மையராகிய பிறதெய்வ, 2 இனிவருந்தலென்று ஆற்றுவித்தான், 3 இது குலத்தெய்வ,
4 வன்பொறை குறித்தறவிர்ச்சி, 5 மரபினென்றவிலைசால்.
இடைநிலைப்பாட்டும் பெற்றுத் தனிச்சொல்லும் பெற்றுத் "தரவியலொத்தும்" (1) என்ற உம்மையான் ஏறியும் வருமென்றலிற் றரவின் மிக்க சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. (15)


20பல்வளம் பகர்பூட்டும் பயனிலம் பைதறச்
செல்கதிர் ஞாயிறு செயிர்சினஞ் சொரிதலிற்
றணிவில்வெங் கோடைக்குத் தண்ணயந் தணிகொள்ளும்
பிணிதெற லுயக்கத்த பெருங்களிற் றினந்தாங்கு
மணிதிகழ் விறன்மலை வெம்ப மண்பகத்
துணிகயந் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்;
கிளிபுரை கிளவியாய் நின்னடிக் கெளியவோ
தளியுறு பறியாவே காடெனக் கூறுவீர்
வளியினும் வரைநில்லா வாழுநா ணும்மாகத்
தளியென வுடையேன்யா னவலங்கொண் டழிவலோ;
11 ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்நீ யுணல்வேட்பி
னாறுநீ ரிலவென வறனோக்கிக் கூறுவீர்
யாறுநீர் கழிந்தன்ன விளமைநுந் நெஞ்சென்னுந்
தேறுநீ ருடையேன்யான் றெருமந்தீங் கொழிவலோ;
15 மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கு
மாணிழ லலவாண்டை மரமெனக் கூறுவீர்
நீணிழற் றளிர்போல நிறனூழ்த்த லறிவேனுந்
தாணிழல் கைவிட்டியான் றவிர்தலைச் சூழ்வலோ;
எனவாங்கு ;
20 அணையரும் வெம்மைய காடெனக் கூறுவீர்
கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப்
பணையெருத் தெழிலேற்றின் பின்னர்ப்
பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே.
இது பிரிவுணர்த்திய தலைவற்குத் தலைவி எம்மையும் உடன்கொண்டு சென்மி னென்றாட்கு அவன் கானின் கடுமையுந் தலைவி மென்மையுங் கூறுவது கேட்ட தலைவி நாளது சின்மையும் இளமையதருமையுங் கூறி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றது.
இதன் பொருள்
பல்வளம் பகர்பூட்டும் பயனிலம் பைதறச்
செல்கதிர் ஞாயிறு செயிர்சினஞ் சொரிதலிற்
றணிவில்வெங் கோடைக்குத் தண்ணயந் தணிகொள்ளும்
பிணிதெற லுயக்கத்த பெருங்களிற் றினந்தாங்கு
மணிதிகழ் விறன்மலை வெம்ப (1) மண்பகத்
துணிகயந் துகள்பட்ட தூங்கழல் வெஞ்சுரம்
எ - து: பல உணவுகளையும் விளைந்து கொடுத்து எல்லாரையும் நுகர்விக்கும் பயனையுடைய நிலம் ஈரம் அறும்படி ஞாயிறு குற்றத்தைச்செய்யுஞ் சினத்தோடே தன்னிடத்தினின்றுஞ் செல்கின்ற கதிர்களைச் 1சொரிகையினாலே மாறுதலில்லாத வெய்ய கோடைக்காலத்திற்கு அதனிடத்துள்ள குளிர்ச்சியை விரும்பித் திரட்சிகொள்ளும் பசிப்பிணியாற் சுடுதலையுடைய வருத்தத்தினையுடையவாகிய பெரிய களிற்றினுடைய திரளைத் தாங்கும் மணிகள் விளங்கும் வெற்றியையுடைய மலை வெம்ப மண்பிளக்கத் தெளிந்த நீர்நிலைகளும் துகளுண்டான செறிந்த அழலையுடைய வெய்ய காடு; எ - று.
தாங்கும் விளங்கும் மலை; அணிகொள்ளுங் களிற்றினம்.
அயத்தணி கொள்ளுமென்று பாடமாயின், நீர்நிலைகளிலே திரட்சி கொள்ளுமென்க.
இது தரவு.
7(2)கிளிபுரை கிளவியாய் நின்னடிக் கெளியவோ
தளியுறு பறியாவே காடெனக் கூறுவீர்
வளியினும் வரைநில்லா வாழுநா ணும்மாகத்
(3) தளியென வுடையேன்யா னவலங்கொண் டழிவலோ
எ - து: ‘கிளியினது மொழியை யொக்கும் மொழியினை யுடையாய்! தூங்கழல் வெஞ்சுரம் 2மழைபெய்தலைக் கண்டறியாவாதலால் அக்காடு நின் அடிக்குப் போதற்கு 3எளியவாயிருக்குமோ’ என்று கூறுகின்றவரே! யான், நும்முடைய ஆகத்திடத்து முயக்கத்தைக் கண்டார் காற்றினுங்காட்டில் ஓர் எல்லையில் அகப்பட்டு நில்லாதவளுடைய வாழ்நாளென்று கூறும்படியாக அதனை (?) வாழ்நாளாக உடையேனாதலால் அவலத்தைக் கொண்டு நெஞ்சழிவேனோ? இறந்துபடுவேனே ; எ - று.
11(4)ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்நீ யுணல்வேட்பி
னாறுநீ ரிலவென வறனோக்கிக் கூறுவீர்

1. (அ) "புலம்பு வீற்றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்" அகம். 335: 8. (ஆ) "வான, நிலம்பக வறந்த புலம்புறு சேணிடை" தமிழ்நெறி. மேற்கோள். (இ) "நிலம்பக வெம்பிய நீள்சுரம்" வளையாபதி.
2. "கிளிபுரை கிளவியாய்" கலி. 13: 18.
3. "அளியென..............................டழிவலோ" என்பது மேற்கதுவாய் மோனைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 92. நச்.
4. (அ) ஏய்க்கும் என்பது அருகிப் பயவுவமையில் வந்ததற்கு "ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்" என்பது மேற்கோள். தொல். உவம. சூ. 14. பே. (ஆ) "எயிற்றமிழ் தூறுந்தீநீர்" கலி. 4: 13.
(பிரதிபேதம்) 1 சொரிகையினாலே மலைவெம்ப, 2 மழையைத்தலைக், 3 போக்கெளிய.
(1)யாறுநீர் கழிந்தன்ன விளமைநுந் நெஞ்சென்னுந்
தேறுநீ ருடையேன்யான் றெருமந்தீங் கொழிவலோ
எ - து: ‘தன்னிடத்து ஊறுகின்ற நீர் அமிழ்தத்தை ஒத்தற்குக் காரணமாகின்ற எயிற்றையுடையாய்! வெஞ்சுரத்துவழி தண்ணீருண்டலை விரும்பின் (2) நீர்களில’ என்று அறத்தைக் கருதிக் கூறுகின்றவரே! யான் உம் நெஞ்சென்று சொல்லப்படுந் தெளிவுநீர்மையை யாறு நீர் கழிந்தாற்போன்ற இளமையாக உடையேனாதலால் இவ்விடத்தே சுழன்று நெஞ்சழிவேனோ? இறந்துபடுவேனே; எ - று.
கழிந்த நீர்போல இளமையும் மீளாதென்பது பொருள்.
15(3) மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கு
மா(4)ணிழ 1லலவாண்டை மரமெனக் கூறுவீர்
நீணிழற் றளிர்போல நிறனூழ்த்த லறிவேனுந்
தாணிழல் கைவிட்டியான் றவிர்தலைச் சூழ்வலோ
எ - து: ‘மாட்சிமைப்பட்ட அழகினையுடைய மூங்கிலை வென்ற தோளினையுடையாய்! நீ வெஞ்சுரத்தே வரில் அவ்விடத்தில் மரங்கள் நின் இளைப்பை ஆற்றும் மாட்சிமைப்பட்ட நிழலையுடையவல்ல’ என்று கூறுகின்றவரே! நீர் நீங்கினால் என் நலம் நீண்ட நிழலினின்ற தளிர்போலே வெளுத்தலை அறிந்திருப்பேனாதலால் யான் உம்முடைய திருவடியில் அருளைக் கைவிட்டு இங்கே இருத்தலைச் சூழ்வேனோ? இறந்துபடுவேனே; எ - று.
வென்ற, உவமவுருபு.
இவை மூன்றும், தாழிசை.

1. என வான்மீகி முனிவரும் இளமை கழிதற்கு யாற்றுநீர் கழிதலை உவமித்திருத்தல் இங்கே அறிதற்பாலது. ஸ்ரீமத் ராமாயணம். சுந். 20: 12.
2. "நன்னீர்கள் சுமந்து" திருவிருத்தம். 32. "கண்ணி னீர்கள் சொரிந்தவை" சீவக. 1391.
3. (அ) வென்ற வென்பது அருகி மெய் யுவமத்தின்கண் வந்ததற்கு "மாணெழில் வேய்வென்ற தோளாய்நீ வரிற்றாங்கும்" என்பது மேற்கோள். தொல். பொ. உவம. சூ.15. பே. (ஆ) வேய்வென்ற தோளென்பது தத்தமரபிற்றோன்றுமன் பொருளேயென்பதற்கு மேற்கோள். தொல். உவம. சூ. 17. இளம். (இ) "வேய்வென்ற தோளான்" கலி. 138: 18-9.
4. "நிழறேய்ந் துலறிய மரத்த" "மரநிழலற்ற வியவிற் சுரன்" அகம். 1: 11; 353: 13.
(பிரதிபேதம்) 1 இல.எனவாங்கு
எ - து: என்று யான் கூறவும்; எ - று.
ஆங்கு, அசை.
இது தனிச்சொல்.
20அணையரும் வெம்மைய காடெனக் கூறுவீர்
(1)கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப்
பணையெருத் தெழி (2) லேற்றின் பின்னர்ப்
(3)பிணையுங் காணிரோ பிரியுமோ வவையே
எ - து: அவ்விடத்துக் காடு நீ அணைய அரிய வெம்மையையுடைய வென்று பின்னுங் கூறுகின்றவரே! பெருக்குங் கல்லின் நெருக்கத்தால் எய்த அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெருமையையுடைய கழுத்தினையும் அழகையுமுடைய எற்றின்பின் நீங்காமற் றிரியும் பிணையையுங் காணா திருக்கின்றீரோ? அவை நீர் அறியப் பிரியாவே; ஆதலால், எம்மையும் உடன்கொண்டே சென்மின்; எ - று.
இது சுரிதகம்.
இதனால், தலைவிக்கு இழிவும் தலைவற்கு அசைவும் பிறந்தன.
இங்ஙனந் தலைவி கூறுதல் "மரபு நிலைதிரியா" என்னும் (4) சூத்திரத்து அமைத்தது.
இஃது ஆறடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (19)

1. "கணைகழி....................வவையே" என்பது எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பதற்குமேற்கோள். தொல். மெய்ப். சூ. 22. பே. இ - வி. சூ. 580.
2. (அ) "கலையொழி பிணையிற் கலங்கிமாறி, யன்பிலி ரகறி ராயின்" நற் 37. (ஆ) "குன்றங் கவைஇய, வங்காட்டா ரிடை மடப்பிணை தழீஇத், திரிமருப் பிரலை புல்லருந் துகள" (இ) "மறியுடை மடப்பிணை தழீஇப்புறவிற், றிரிமருப் பிரலை பைம்பயி ருகள" அகம்.. 14: 4 - 6. 314 : 5 - 6. (ஈ) "உருகு மடமான் பிணையோ டுகளும்" திணைமொழியைம். 25. (உ) "மான்வீடு போழ்திற் பிணையின்னுயிர் போவதே போல்" யா-வி. சூ. 95. மேற்கோள் (ஊ) "உங்கள், கண்போற் பிணையுங் கலையுமிங் கேவரக் கண்டதுண்டோ" அம்பிகா. 85.
3. பிணையென்னுஞ்சொல் பொருணோக்கிற் பிரியாது பிணையும் பிற சாதிக்குஞ் செல்லுமாயினும், மரபு நோக்கப் பிணையென்றற்குச் சிறப்புடையன: புல்வாய் நவ்வி உழை கவரி யென்பர், பேராசிரியர்; தொல். மரபு. சூ. 57.
4. தொல். அகத். சூ. 45.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக