வெள்ளி, 3 ஜூன், 2011

சீவகசிந்தாமணி விமலையார் இலம்பகம்




திருத்தக்க தேவர்
இயற்றிய
சீவகசிந்தாமணி

8. விமலையார் இலம்பகம்
(கதைச் சுருக்கம்)

விசயையைக்காண, வேணவாக்கொண்டு தோழரொடு தண்ட காரணிய நோக்கிய விரைந்த சீவகன் தன் வரவினை எதிர்பார்த்திருந்த விசயையின் தவப்பள்ளியை எய்தி அவளைக் கண்டு அடியில் வீழ்ந்து வணங்கி அளவிலா மகிழ்ச்சி எய்தினன். விசயையும் தன் அருமை மகனை அரிதிற் கண்டு அன்புகூர்ந்து இன்பமுற்றனள். பின்னர் விசயை கட்டியங்காரனை வெல்லுதற்குக் கோவிந்தனைத் துணைக்கொள்க என்று சீவகனுக்குணர்த்தினள். பின்னர்ச் சீவகன் விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தன் நகரத்திற்குப் போக்கினன். பின்பு தோழன்மாரோடு ஏமாங்கதம் புகுந்து இராசமாபுரத்துப் புறச்சோலையிற் சென்று தங்கினன். மறுநாட் காலையில் தோழரை அச் சோலையிலேயே இருக்கப் பணித்துத் தான் அழகிய வேற்றுருவங் கொண்டவனாய் அந்நகர மறுகிற் றமியனாய்ச் சென்றனன்.
அங்ஙனம் செல்லும்பொழுது அந் நகரத்துள்ளவனாகிய சாகரதத்தன் என்னும் வணிகனுடைய மகள் விமலை என்பாள் பந்தாடியவள் அச் சீவகனைக் கண்டு அவன் பேரழகிலே நெஞ்சம் போக்கி மயங்கினள். சீவகனும் அந்நேரிழையை நோக்கி அன்பு கூர்ந்து அவ்விடத்தினின்றும் அகலமாட்டாதவனாய்ச் சாகரதத்தன் கடையின்கண் வந்திருந்தனன்.
சீவகன் வந்து புகுந்தவுடனே அச் சாகரதத்தன் கடையிலே விலையாகாமற் றங்கிக்கிடந்த சரக்கெல்லாம் விலையாகி விட்டன. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, முகமன் மொழிந்து, ”ஐய! கணியொருவன் நின் மகள் விமலை என்பாளுக்குரிய கணவன் நின் கடைக்கு வலிய வருவான். அவன் வந்தமைக்கு அறிகுறி அப்பொழுது நின் கடைச் சரக்கெல்லாம் ஊதியமுண்டாக விரைவின் விற்றுப்போம் கண்டாய்! என்று எனக்குக் கூறியிருந்தான். அங்ஙனமே நீ என் கடையேறியவுடன் அப் பழஞ்சரக்கெல்லாம் விலைப்பட்டன. ஆதலால் நீயே விமலை கணவன் ஆதல் கூடும் என்று கருதுகின்றேன்,” என்று கூறி அவனை ஆர்வத்துடன் அழைத்தேகி விமலையை அவனுக்கு மணம் செய்வித்தனன். சீவகன் அவளுடன் இரண்டு நாள் கூடி இன்புற்றிருந்து மறுநாள் சென்று மனக்கினிய தோழரைக் கண்டனன்.

1889 (இ - ள்.) முருகு கொப்புளிக்கும் கண்ணி - தேனைப் பிலிற்றும் தலை மாலையினையும்; முறிமிடை படலைமாலை - தளிர் கலந்த வகைமாலையினையும்; குருதி கொப்புளிக்கும் வேலான் - செந்நீரை உமிழும் வேலினையும் உடைய சீவகன்; கூந்தல் மா இவர்ந்து செல்ல - குதிரை மீதேறிச் செல்ல; உருவ வெஞ்சிலையினாற்குத் தம்பி - அழகிய கொடிய வில்லேந்திய சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன்; ஒண் பொன் பருகு பைங்கழலினாருள் பதுமுகன் கேட்க என்று இஃது உரைக்கும் - ஒள்ளிய பொன் பொருந்திய கழலணிந்த தோழர்களில் பதுமுகனைக் கேட்பாயாக என விளித்து இதனைக் கூறுவான்.

1890(இ - ள்.) விழுமணி மாசு மூழ்கி இவ்வுலகம் விற்பக் கிடந்து - சிறந்த மணி மா சேறி இவ்வுலகை விலையாகப் பெறும் படி கிடந்ததனை; கழுவினீர் - கடுக வெளியாக்கி விட்டீர்; சிக்கப் பொதிந்து கதிர் ஒளி மறையக் காப்பின் - இனி, முன்போல அகப்படப் பொதிந்து கதிரொளிக்கு மறைவாகக் காப்பீராயின்;உலகம் எல்லாம் தழுவினீர் - உலகம் முழுதும் கைக்கெண்டீராவீர்; தாமரை உறையும் செய்யாள் விழுவினார் தம்மைப் புல்லாள் - தாமரையில் வாழும் திருமகள் காவாது வழுவினவரைச் சேராள்; (ஆகையால், காவாது வழுவாதீர்); நும் கண்ணி வாழ்க! - நும் கண்ணி வாழ்வதாக.

1891 (இ - ள்.) தொழுத தம் கையினுள்ளும் - தொழுத தம் கையிலும்; துறுமுடி அகத்தும் - மயிர் நெருங்கிய முடியிலும்; சோர அழுத கண்ணீரின் உள்ளும் - ஒழுக அழுத கண்ணீரிலும்; அணிகலத்தகத்தும் - அணிகலன்களிலும்; கொல்லும் படை உடன் ஒடுங்கும் - கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; ஆய்ந்து - அதனை ஆராய்ந்து; பழுது கண்ணரிந்து - அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி; யார்கண்ணும் தேற்றம் பற்றாது ஒழிக - யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக; தெளிகுற்றார் விளி குற்றாரே - அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர்.

1892(இ - ள்.) தோய்தகை மகளிர்த் தோயில் - கூடுதற்குரிய மகளிரைக் கூட வேண்டின்; மெய் அணி நீக்கி - அம் மகளிரின் மெய்யில் அணிந்த பூணை நீக்கி; ஆய்முது மகளிர் தம்மால் அரில் தபத் திமிரி ஆட்டி - ஆராய்ந்து தெளிந்த மூப்பியராலே குற்ற மின்றித் திமிர்ந்து தூய நீராட்டி; வேய்நிறத் தோளினார்க்கு - மூங்கிலனைய ஒளியுறுந் தோளையுடைய அம் மகளிர்க்கு; வெண்துகில் மாலை சாந்தம் நலகலங்கள் சேர்த்தி - வெண்மையான ஆடையும் மாலையும் சந்தனமும் நல்ல கலன்களும் சேர்த்தி; தான் தடமுலை தோய்க என்றான் - பின்னரே அரசன் அம் மகளிரின் பெரிய முலைகளைத் தழுவுக என்றான்.

1893 (இ - ள்.) வண்ணப்பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை - அழகிய மலர்மாலை சந்தனம் தூய பூண்கள் ஆடை முதலியவற்றை; அண்ணல் அம்புள்ளோடு அல்லா ஆயிரம் பேடைச் சேவல் - அரச வன்னமும் அதுவே அன்றி ஆயிரம் பெடையுடன் நிற்கும் சக்கரவாகப் புள்ளும் ஆகிய இவற்றின்; கண் முகத்து உறுத்தி - கண்ணினும் முகத்தினும் பொருத்தி; தூய்மை கண்டலால் கொள்ளவேண்டா - தூய்மை கண்டல்லதுகொள்ளுதல் வேண்டா; உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமொடு ஆய்க என்றான் - உண்ணும் நீரையும் உணவையுந் தீங்கு வாராமற் காத்தற்குக் கருங்குரங்கிற் கிட்டு ஆராய்க என்றான்.

1894 (இ - ள்.) அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் - அஞ்சனக் கோலால் அடித்தற்குப் பற்றாத நாகப்பாம்பு; அருவிக் குன்றின் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றின் கொல்லும் - அருவியை யுடைய குன்றைப் போன்ற மதயானை புலம்பி வீழும் படி எயிற்றாற் கடித்துக் கொல்லும்; பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா - பஞ்சியினும் மெல்லியதா யினும் பகையைச் சிறிது என்று கருதவேண்டா; அரும் பொருளாக அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்றான் - அதனை அரும்பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்க வேண்டும் என்றான்.

1895 (இ - ள்.) பொருந்தலால் பல்லி போன்றும் - விடாமல் இவனிடத்திருத்தலாற் பல்லியைப் போன்றும்; போற்றலால் தாயர் ஒத்தும் - வேண்டுவன தந்து காப்பாற்றலால் அன்னையர் போன்றும்; அருந்தவர் போன்று காத்தும் - அருந்தவர் சீல முதலியவை தப்பாமற் காக்குமாறு போல இவற்கும் அவை தப்பாமற் காத்தும்; அடங்கலால் ஆமை போன்றும் - ஐம்பொறியும் தமக்கு அடங்கலின் ஆமை போன்றும்; திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் - திருந்திய வேலேந்திய பகைவர் போன்று இவனுக்குண்டான தீது தீரும்படி இடித்துக் கூறியும்; இன்பமருந்தினால் மனைவி ஒத்தும் - இன்பந்தரும் உணவுகளை நுகர்வித்தலால் மனைவியை போன்றும்; மதலையைக் காமின் என்றான் - நமக்கு ஆதரவான சீவகனைக் கப்பாற்றுமின் என்றான்.

1896 (இ - ள்.) பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் - பூந்துகிலும் மாலையும் சாந்தமும் பூணும் முகவாசம் ஐந்தும்; ஆய்ந்து அளந்து இயற்றபப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம் - ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட்ட உணவும் நீரும் இத் தன்மையானவற்றை யெல்லாம்; மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று - மக்களிலே சிங்கம் போன்ற ஆற்றலையுடைய பதுமுகன் காப்பானாக என்று; ஏந்து பூண் மார்பன் ஏவ - விளங்கும் பூணணிந்த மார்பனாகிய சீவகன் பணிக்க; இன்னணம் இயற்றினான் - அவனும் இப்படிக் காத்தலை நடத்தினான்.

1897 (இ - ள்.) சிறுகண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள - சிறிய கண்களையுடைய யானைத்திரள் கூடித் துயில் கோடலின்; மந்திமக உணர்கலா துறுகல் என்று துள்ளி - குரங்கின் குட்டிகள் யானையென்றுணராமல் பெரிய கல் என்று நினைத்து மேலே துள்ளி; நறிய சந்தின் துணி வெந்தனகள் கொண்டு நாற எறிய - நல்ல சந்தனக் கட்டைகள் வெந்தனவற்றைக் கொண்டு மணம் வீசுமாறு ஒன்றையொன்று எறிய; மயிர்க் கவரி மாஎள்கி இரியும் - மயிரையுடைய கவரிமா துணுக்கென அச்சுற்று ஓடும்.

1898இ - ள்.) பவழமே அனையன பன்மயிர்ப் பேரெலி - பவழமே போன்றனவாகிய மிகுதியான மயிரையுடைய பேரெலிகள்; புகழ்வரைச் சென்னிமேல் - புகழப்படுகின்ற மலையுச்சியின் கண் வாழும்; பூசையின் பெரியன - பூனையினும் பெரியவனாய்; அகழும் இங்குலிகம் - அகழும் சாதிலிங்கம்; அஞ்சனவரை சொரிவன - அஞ்சன வரையின் தாழ்வரையிலே வீழ்கின்றவை; கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்த - கவள முண்ணும் - யானையின் நெற்றியிலே தவழும் பட்டுக் கச்சைப் போன்றன.

(இ - ள்.) வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மரபு - 68) என்றார்.

1899 (இ - ள்.) அண்ணல் அம் குன்றின்மேல் - பெரிய குன்றுகளின்மேல்; வருடை பாய்ந்து உழக்கலின் - வருடை மான் பாய்ந்து மிதித்தலின்; ஒண் மணி பல உடைந்து - சிறந்த மணிகள் பலவும் உடைந்து; அவை ஒருங்கு தூளியாய் - அவை ஒருசேரச் செந்தூளியாய்; விண் உளு வுண்டு என மா நிலமிசை வீழும் - அத்தூளி வானுலக உளு வுண்ட தென்னும்படி பெரிய நிலத்திலே வீழா நிற்கும்; கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்த - (அஃது அங்ஙனம் வீழ்தலின்) பரப்புடைய நிலத்தின் மரங்கள் யாவும் அத்தூளி போர்த்துக் கற்பகத்தைப் போன்றன.

1900(இ - ள்.) கிலுத்தம் மானிடம் பழுத்தன - கிலுத்தம் என்னும் மரம் மக்கள் வடிவாகப் பழுத்தனவாய் இருந்தன. மற்று அவற்று அயல் கானிடை - பின்னை, அவற்றின் அயலிலே கானிடையிலே; பால் முரண் பயம்பிடை - பால்போல வெண்மையான ஏற்றிழிவுடைய நிலத்திற் குழியிடையிலே; பனை மடிந்தனையன பாந்தள் - பனை கிடந்தனையவாகிய பாம்புகள்; கண் படுப்பன துயில் எழ - துயில்வன துயில் எழும்படி; ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்பும் - ஊன் பொருந்தியதனாற் பொன் போன்ற குகையிலிருந்து யாளிகள் முழங்கும்.


1901(இ - ள்.) அம் திமிசு சாரலிடைச் சந்தனத் தழை வயின் - அழகிய திமிசு சூழ்ந்த சந்தன மரத்தில் தழைக்கு நடுவே; நீர தீம்பூ மரம் - நீர்மையை யுடைய தீம்பூ மரமும்; நிரந்த தக்கோலமும் - நிரவலாக இருந்த தக்கோல மரமும்; ஏர் இலவங்கமும் - அழகிய இலவங்க மரமும்; இன் கருப்பூரமும் - இனிய கருப்பூரமும்; நாவி கலந்த ஓசனை கமழும் - புழுகுடன் கலந்து நாற்காத எல்லை கமழும்.


1902
(இ - ள்.) மைந்தரைப் பார்ப்பன மாமகள் மாக்குழாம் - மைந்தரைப் பார்ப்்பனவாகிய பெரிய மகண்மாக்களின் திரளும்; சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்றினம் - சந்தனத் தழையை மேய்வனவாகிய மதம் தவழும் களிற்றின் திரளும்; அம் தழைக்காடு எலாம் திளைப்ப ஆமான்இனம் - அழகிய தழையை உடைய காடுகளில் எல்லாம் பயில்வனவாகிய ஆமானின் திரளும்; சிந்த - சிதறி ஓடும்படி; வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள - வாலை வீசுவனவாகிய சிங்கங்கள் எங்கும் உள்ளன.
(வி - ம்.) இனி, இவை நான்கும் எங்கும் உள எனினும் ஆம்.


1903 (இ - ள்.) வருக்கையின் கனி தொறும் வானரம் பாய்ந்து - பலாவின் கனி தொறும் வானரங்கள் பாய்தலால்; பொருப்பெலாம் உராய் ஒழுகி - மலையெங்கும் பரவி ஒழுகி; பொன்

கிடந்து ஒளிர் மணி திருக்களர் ஒளி குலாய் - பொன் கிடந்து ஒளிரும் மணிகளின் அழகிய கிளர்ந்த ஒளியுடன் குலாவி; மேல் திருவில் வீழ்ந்து - மேலுண்டாகிய வானவில் வீழ்ந்து; ஒருக்குலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து - ஒருங்கு வளைந்து விளங்குவன போன்று; வான் அகம் செகுக்கும் - வானத்தை வெல்லும்.

1904( 15 )(இ - ள்.) அவ் அருவரைச் சாரல் நெறியெல்லாம் - அந்த அரிய மலைச்சாரலின் வழியெங்கும்; வீழ் பனிப் பாறைகள் - வீழ்ந்த பனிப் பாறைகள்; வெவ்வெயில் போழ்தலின் - கொடிய வெயில் உருக்குவதால்; வெண்ணெய் போல் பொழிந்து - வெண்ணெய்போலப் பொழிவதும் புரிந்து; மட்டு ஒழுகுவ தாழ்முகில் சூழ் பொழில் - தேனொழுகுவன வாகிய, முகில்சூழ் பொழிலிலே; சந்தனக் காற்று அசைந்து - சந்தனக் காற்றும் வீசி; ஆழ்துயர் செய்யும் - மிகுதுயரைச் செய்யும்.

1905(இ - ள்.) கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து - கூகை என்னுங் கொடியும் கோட்டம் குங்குமம் என்னும் மரங்களும் பரவியிருப்பதால்; ஏகல் ஆகா நிலத்து அல்கி - அழகாற் போதற்கு அரிய நிலத்தே தங்கி; விட்டு எழுந்து போய் - அவ்விடத்தைவிட்டு எழுந்து சென்று; தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது - மயிலும் அன்னமுங் கூடி ஆரவாரிப்பதாகிய, ஓர் நாக நன்காவினுள் நயந்து விட்டார்கள் - ஒரு நாகமரப் பொழிலிலே விரும்பித் தங்கினார்கள்.

1906 (இ - ள்.) பூத்து அகில் தவபம் போர்வை - பொலிவு பெற்று அகிற்புகை தவழும் போர்வையையும்; பூசு சாந்து ஆற்றி - மேலே பூசிய சந்தனத்தை ஆற்றும் சிற்றால வட்டத்தையும்; பொன் நூல் - தலையிற் கட்டும் பொன்னூலையும்; நீர் கோத்துப் பிலிற்றும் காந்தம் - நீரை விடாமல் துளிக்கும் சந்திரகாந்தக் கல்லையும்; குங்கும வைரப் பொன்கோய் - குங்குமம் வைக்கும் வைர மிழைத்த பொற்சிமிழையும்; சாத்துறி - பரணிக் கூட்டையும்; பவழக் கன்னல் - பவழக் கரகத்தையும்; சந்தன ஆல வட்டம் - சந்தன மரத்தாற் செய்த பேரால வட்டத்தையும்; நீத்தவர் இடத்து நாற்றி - தாபதரின் பள்ளியிலே தூக்கி; நிழல் மணி உலகம் செய்தார் - ஒளியையுடைய அழகிய வானுல காக்கினர்.

1907(இ - ள்.) நித்தில முலையினர்தம் நெடுங்கணால் நோக்கப் பெற்றும் - முத்தணிந்த முலையினருடைய பெருங்கண்களாற் பார்க்கப் பெற்றும் : கைத்தலம் தீண்டப் பெற்றும் - கைகளால் தொடுதல் பெற்றும்; கனிந்தன - கனியாதன கனிந்தன; மலர்ந்த - பூவாதன பூத்தன; காண்க - அவற்றைக் காண்பீராக!; வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை யென்பார் - மங்கையர் கையை வைத்து மலர் கொய்தற்கேற்ற அளவிலே தாழ்ந்து கொடுப்பதுஞ் செய்தனவாகிய மரங்கட்கு உயிர் இல்லை

என்றுரைப்பவர்; பித்து அலராயின் - பித்தர் அல்லராயின்; பேய்கள் என்று அலால் - பேய்கள் என்று கூறுதலையன்றி; பேசலாமோ - வேறே கூறத்தகுமோ? (என்று அவர்கள் தம்முள் உரைத்துக் கொண்டனர்).

1908(இ - ள்.) மைந்தன் - சீவகன்; பொறிமயில் இழியும் பொன்தார் முருகனின் பொலிந்து - புள்ளிகளையுடைய மயிலினின்றிறங்கும் பொன்மாலை அணிந்த முருகனைப் போலப் பொலிவுற்று; மாவின் நெறிமையின் இழிந்து - குதிரையிலிருந்து இறங்கும் முறையான் இறங்கி; கைமணி மத்திகையை நீக்கி - கையிலிருந்து மணிகள் இழைத்த குதிரைச் சம்மட்டியை நீக்கி; வெறுமையினவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால் - அறிவிலாதாரைப் போகவிடுத்து, அடிகளை வெளியிடும் வகை நேராதவாறு; மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி அறி என்றான் - மயில் அகவும் தவப் பள்ளியிலே சென்று அடிகளைச் செவ்வியறிவாயாக என்றான்.


1909 (இ - ள்.) எல்இருள் கனவில் கண்டேன் - விடியற்காலத் திருளிலே கனவிலே கண்டேன்; கண்இடன் ஆடும் இடக்கண் ஆடும்; இன்னே பல்லியும் பாங்கர் பட்ட - இப்பொழுதே பல்லியும் நல்ல இடத்தே பட்டன; நம்பி வருங்கொலோ என்று சொல்லினள் - (ஆதலால்) நம்பி வருவானோ என்று கூறியவளாய் - தேவி நிற்ப - விசயை நிற்ப; பதுமுகன் தொழுது சேர்ந்து - பதுமுகன் தொழுதவாறு சென்று; நல்அடி பணிந்து - அழகிய அடியிலே வணங்கி; அடிகள் நம்பி வந்தனன் என்றான் - அடிகளே! நம்பி வந்தான் என்றான்.

1910 (இ - ள்.) எங்கணான் ஐயன் என்றாட்கு - எங்குளான் என் ஐயன் என்றாட்கு; அடியன் யான் அடிகள் என்னா - அடியேன் ஈங்குளேன் அடிகளே என்று; பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக்கடகம் ஆர்ந்த - மிகுதியாக ஒளியை உமிழ்ந்து விளங்கும் அழகிய மணிக் கடகம் பொருந்திய; தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது - ஒளி தங்கிய பெரிய கையைக் குவித்துத் தொழுது; அடிதழுவி வீழ்ந்தான் - (பிறகு) அன்னையின் அடிகளைத் தழுவி வீழ்ந்தான்; அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலைகடல் - அவ்விடத்து அவ்விருவரும் முன்னீராலே இரண்டு் அற்புக் கடல் கலந்தது போன்றார்.

1911(இ - ள்.) திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே - அங்ஙனம் வீழ்ந்த சிறுவனைப் பார்த்தபோதே; வாள் கண் சுமந்து வருபனி - ஒளியுற்ற கண் சுமந்து பெருகிய நீரும்; வனமுலை பொழிந்த தீ பால் - அழகிய முலை பெய்த இனிய பாலும்; முருகுடை மார்பின் பாய்ந்து - சீவகனுடைய மார்பிலே பாய்ந்து; முழுமெயும் நனைப்ப - மெய்யெல்லாம் நனைக்கும்படி; மாதர் - விசயை; என் களிறு! வருக என்று ஏத்தி - என் களிறே! வருக! எனப் புகழ்ந்து; வாங்குபு தழுவிக்கொண்டாள் - தன் மார்பிலே அவன் மார்பு ஒடுங்கம்படி தழுவிக்கொண்டாள்.

1912(இ - ள்.) தொழுதகு தெய்வம் அன்னாள் - யாவரும் வணங்கும் தெய்வம் போன்ற; வாளை ஆம் நெடிய கண்ணாள் - வாளைப்போன்ற நீண்ட கண்ணாளாகிய விசயை; காளை ஆம் பருவம் ஓராள் - இது காளைப்பருவம், தழுவலாகாதென்று நினையாளாய்; காதல் மீக் கூர்தலாலே - காதல் மிகுந்து பரவுதலாலே; மகனை மார்பு ஒடுங்கப் புல்லி - சீவகனைத் தன் மார்பிலே குழவிப்பருவம்போல ஒடுங்குமாறு தழுவி; ஐயா! முன்பு தாள் செய்த தவத்தது விளைவு இலாதேன் - ஐயனே! முற்பிறப்பிலே முயற்சியாற் செய்த தவத்தின் பயன் இல்லாத என்னுடைய; தோள் அயாத் தீர்ந்தது என்றாள் - தோள் வருத்தம் நீங்கியது என்றாள்.

1913(இ - ள்.) சேடு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே! - பெருமையையுடைய இள ஞாயிறு போலும் மார்பினையுடைய சீவக சாமியீரே!; வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து - வாள் வலி பெற்ற அரசனைப் போரிலே கைவிட்டு; உம்மைக் காட்டகத்து நீத்த - நும்மைச் சுடுகாட்டிலே கைவிட்ட; கயத்தியேற் காண - கொடியேனைக் காண; ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடிநோவ - ஊட்டிய செந்நிறங்கொண்ட செந்தாமரை அனைய அடிகள் நோமாறு; வந்தீர் என்றாள் - வந்தீரே! நும் அன்பிருந்தவாறு என்னே! என்றாள்.

1914 (இ - ள்.) கெடல் அருங் கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி - கெடாத வெற்றியையுடைய அரசன் கெடுமாறு பிறந்ததுவும் அல்லாமல்; அடிகள் நடலையுள் வைக - அடிகள் வருத்தத்திலே தங்க; நட்புடையவர்கள் நைய - நண்பர்கள் வருந்த; இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த - இடையன் வெட்டிய துன்புறும் மரத்தின் தன்மையுடையேனாகிய யான் தந்த; துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா - துன்பக்கடலிலேஅழுந்த வேண்டா; இக்கவலை களைக என்றான் - இனி இத்துன்பத்தைக் கைவிடுக என்றான்.


1915 (இ - ள்.) ஐயற்கு ஒளவை யாவாள் சுநந்தையே, யான் அலன் - ஐயனுக்குத் தாயாவாள் சுநந்தையே, யானல்லேன்; தந்தை கந்துக் கடன், கோன் அலன் - தந்தையாவான் கந்துக் கடனே, அரசனல்லன்; என - என்று; பால்நிலத்து உறையும் தீதேன் அனையவாய் அமிர்தம் ஊற - பாலிடத்தே தங்கும் இனிய தேனைப் போன்றனவாய் இனிமையூறும்படி; குணத்தின் மிக்க மான் நலம் கொண்ட நோக்கி - குணத்திற் சிறந்தவளும், மானின் அழகைக்கொண்ட நோக்கத்தை யுடையவளுமான விசயை; மகன் மனம் மகிழச் சொன்னாள் - சீவகன் மனங்களிக்கக் கூறினான்.

1916 (இ - ள்.) எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே; ஐயன் அல்லை - எனக்கு உயிர்போலும் சிறுவனாவான் நந்தட்டனே, நீ அல்லை; வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி - (ஆதலால்) அழகுடைய மகனே! இங்கே வருக என்று கூறி (அவனை) அருகே அணைத்து; புனக் கொடி மாலையோடு பூங்குழல் திருத்தி - புனக்கொடி போன்றாள் அவனுடைய மாலையையும் மலர்க் குழலையுந் திருத்தி; போற்றார் இனத்திடை ஏறு அனானுக்கு - பகைவர் திரளிலே சிங்கம் போன்ற நந்தட்டனுக்கு; இன் அளி விருந்து செய்தாள் - இனிய தண்ணளியாகிய விருந்தைச் செய்தாள்.


1917(இ - ள்.) இறைவி - விசயை; சிறகரால் பார்ப்புப் புல்லித் திருமயில் இருந்ததேபோல் - சிறகினாலே குஞ்சுகளைத் தழுவி அழகிய மயில் இருந்ததைப்போல; தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி - தன் மக்களை இரண்டு கையாலும் தழுவி; குமரர்க்கு எல்லாம் முறைமுறை மொழி அமை முகமன்கூறி - மற்றைய மைந்தர்கட்கெல்லாம் முறைமுறையாக இன்மொழி கலந்த முகமன் மொழிந்து; அறுசுவை அமிர்தம் ஊட்டி - அறுசுவை உண்டியை உண்பித்து; அறுபகல் கழிந்த பின்னாள் - ஆறுநாட்கள் கழிந்து ஏழாவது நாளிலே,

1918 (இ - ள்.) மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம் குரவம் கோங்கம் குடம்புரை காய் வழை - மரவமும் நாகமும் மணம் பொருந்திய சண்பகமும் குரவமும் கோங்கமும் குடம் போன்றகாயையுடைய சுரபுன்னையும்; விரவு பூம்பொழில் - கலந்த மலர்ப் பொழிலிலே; உருவமாதர் - அழகினையுடைய விசயை; வேறு இருந்து - மைந்தருடன் தனியே இருந்து; ஆய்பொருள் இது உரைக்கும் ஆராய்ந்த பொருளாகிய இதனை உரைப்பாள்.

1919(இ - ள்.) நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள் புலியனார் மகள் கோடலும் - அழித்தற்கரிய மலையிலும் காட்டிலும் உறைகின்ற பெரும் பொருளையுடைய குறுநில மன்னர் மகளைக் கொள்ளுதலும்; பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகள் கோடலும் - புவியிடை வலிய அரசர் மகளைக் கொள்ளுதலும்; நிலைகொள் மன்னர் வழக்கு என நேர்ப - தம்முன்னோர்போல் நிலைகொள்ளும் அரசரின் முறைமையென்று நூல்வல்லோர் ஒப்புவர்.

1920 (இ - ள்.) நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல் - அரசியல் முறையாலே ஆறிலொன்றாக வரையறுத்து அப் பொருளைச் சேர்த்தல்; ஆதி ஆய அரும்பகை நாட்டுதல் - தொன்மையான பகையைத் தம் நெஞ்சிலே நிலைபெறுத்துதல்; முள்ளொடு முள்பகை பேதுசெய்து மோதிக் கண்டிடல் - முள்ளைக்கொண்டு முள்ளைக் களையுமாறுபோலத் தமக்குப் பகைஞராய் உறவாயிருப்பவர் இருவரைத் தம்மில் வேறுபடுத்தி ஒருவரைக்கொண்டு ஒருவரை மோதியிடுதல்; பிளந்திடல் - தம்மிற் கூடி வந்து வினைசெய்வாரைப் பிரித்துத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் : பெட்டது - அரசர் விரும்பப்பட்ட பொருளாகும்.

1921 (இ - ள்.) ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும் - ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும்; கற்ற மாந்தரைக் கண்எனக் கோடலும் - அறநூல் கற்ற அமைச்சரைக் கண்போலக் கொள்வதும்; சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் - மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும்; கொற்றம் கொள் குறிக் கொற்றவற்குச் சூது என்ப - வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப.

1922 (இ - ள்.) பொன் துஞ்சு ஆகத்தினாய் - திருமகள் தங்கும் மார்பினாய்!; வென்றி ஆக்கலும் - வெந்றியை உண்டாக்கலும்; மேதகவு ஆக்கலும் - மேம்பாட்டை உண்டாக்கலும்; அன்றியும் - இவைகளே அல்லாமல்; கல்வியோடு அழகு ஆக்கலும் - கல்வியையும் அழகையும் உண்டாக்கலும்; குன்றினார்களைக் குன்று என ஆக்கலும் - மெலிந்தவரை மலையென வலியுடையராக்கலும்; பொருள் செய்யும் - பொருளாற் செய்ய வியலும்.

1923 (இ - ள்.) பொன்னின் பொருபடை ஆகும் - இப் பொருளாலே போருக்குரிய படையுண்டாகும்; அப் படைதன்னின் தரணி ஆகும் - அப்படையினாலே நாடு கிடைக்கும்; தரணியின் பின்னைப் பெரும் பொருள் ஆகும் - நாட்டினாலே பிறகு பெரிய பொருள் கிடைக்கும்; அப்பொருள் துன்னும் காலைத் துன்னாதன இல்லை - அப்பொருள் கைகூடுமானால் வீடும் கிடைக்கும்.

1924 (இ - ள்.) காளை - காளையே!; நிலத்தின் நீங்கி - நிலத்தையிழந்து; நிதியினும் தேய்ந்து - செல்வத்தினுங் குறைந்து; குலத்திற்குன்றிய கொள்கையாம் - நல்குலத்தில் தாழ்ந்த கொள்கையினை உடையேம்; அல்லதூஉம் - அல்லாமலும்; கலைக்கணாளரும் இங்கு இல்லை - (இந்நிலையை நீக்கற்குரிய) அமைச்சரும் இவ்விடத்தே இல்லை; நீ வலித்தது என் என - நீ துணிந்தது யாது என்று வினவ; வள்ளலும் கூறுவான் - சீவகனும் உரைப்பான்.

1925(இ - ள்.) எரியொடு நிகர்க்கும் ஆற்றல் - தீயொடு நிகர்க்கும் ஆற்றலையுடைய; இடிக்குரல் சிங்கம் ஆங்கு ஓர் நரியொடு பொருவது என்றால் - இடிபோலும் முழக்கத்தையுடைய சிங்கம் ஆங்கு ஒரு நரியுடன் போர் புரிவதென்னின்; சூழ்ச்சி நல்துணையொடு என் ஆம்? - அவ்விடத்து அருளிச் செய்த சூழ்ச்சியும் துணைகளும் என்னவாகும்?; பரிவொடு கவலவேண்டா - என்மேல் வைத்த அன்பினால் இதற்கு வருந்த வேண்டா; அவன் பாம்பு - கட்டியங்காரன் பாம்பு ஆவான்; சொரிமதுச் சுரும்பு உண் கண்ணிச் சூழ்கழல் நந்தன் கலுழன் ஆகும் - பொழியுந்தேனைச் சுரும்புகள் பருகுங் கண்ணியையும் சூழ்ந்த வீரக்கழலையுமுடைய நந்தட்டன் கருடன் ஆவான்; என்றான் - என்று சீவகன் கூறினான்.

1926 (இ - ள்.) நந்தன் கெலுழனோ என்னா - (அதுகேட்ட விசயை) நந்தட்டன் கலுழனோ என்று கூறி; கிளர் ஒளி வனப்பினானைக் கலுழத் தன் கையால் தீண்டி - விளங்கும் ஒளியும் அழகும் உடைய அவனை மனமுருகும்படி தன் கையினாலே தீண்டி; காதலிற் களித்து நோக்கி - அன்பினாற் களிப்புற்றுப் பார்த்து; வலிகெழு வயிரத் தூண்போல் திரண்டு நீண்டு அமைந்த திண்தோள் - ஆற்றல்பொருந்திய வயிரத் தூணைப்போலத் திண்ணியவாய்த் திரண்டு நீண்டு அமைந்த தோள்கள்; கலிகெழு நிலத்தைக் காளைக்குக் காவாது ஒழியுமோ என்றாள் - கட்டியங்காரனிடத்துப் பொருந்திய நிலததைக் காளைக்குக் கொண்டு தந்து காவாமல் நீங்குமோ என்றாள்.

1927 (இ - ள்.) கடத்திடைக் காக்கை ஒன்றே - காட்டிலுள்ள ஒரு காக்கையே; ஆயிரங்கோடி கூகை இடத்திடை - எண்ணிறந்த கூகையிருக்கின்ற இடத்திலே; அழுங்கச் சென்று - அவை வருந்துமாறு பகற்காலத்தே சென்று; ஆங்கு இன்உயிர் செகுத்தது அன்றே? - அங்கே அவற்றின் இனிய உயிரைக் கெடுத்தது அன்றோ?; (ஆகையால்) இடத்தொடு பொழுதும் நாடி - இடத்தையும் காலத்தையும் எண்ணி; எவ்வினைக் கண்ணும் அஞ்சார் - ஆண்டுச் செய்யும் எத் தொழிலுக்கும் அஞ்சாராய்; மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு - அறியாமையிற்படுதலில்லாமல் ஆராயும் அறிவினையுடையார்க்கு; அரியது உண்டோ? - முடியாதது உளதோ?

1928 (இ - ள்.) முழையுறை சிங்கம் மைதோய் வழையுறை வனத்து பொங்கி முழங்கிமேற் பாய்ந்து - குகையில் இருந்த சிங்கம் இடமறியாமல் முகில் தங்கும் வழை பொருந்திய காட்டிலே கிளர்ந்து ஆரவாரித்து (நரியின்)மேற் பாய்ந்து; வன்கண் நரி வலைப்பட்டது அன்றே? - கொடிய அந் நரியாகிய வலையிலே அகப்பட்டுக் கொண்டது அன்றோ?; (ஆகையால்) இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற - அணிகலன்களைச் சுமக்கமாட்டாது நுண்ணிடை சோர நின்ற; குழை நிற முகத்தினார் போல் - குழையணிந்த ஒள்ளிய முகமுடைய மகளிரைப்போல; குறித்ததே துணிந்து செய்யார் - யாம் வீரமுடையேம் என்று நினைத்ததை (காலம் இடம் உணராமல்) நினைத்த படியே செய்ய முற்படார்.


1929(இ - ள்.) ஊழி வாய்த் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் - ஊழிக் காலத்தீயைப் போன்றவனாகிய பதுமுகன் கூறுவான்; ஒன்னார் ஆழிவாய்த் துஞ்ச - பகைவர் கடலிலேபட; எம் ஆற்றலால் நெருங்கி வென்று - எம் வல்லமையால் அடர்த்து வென்று; மாழை நீள் நிதியம் துஞ்சம் மாநிலக்கிழமை எய்தும் - பொன் மிகுந்த செல்வம் தங்கிய பெருநில ஆட்சியை அடைவோம்; பாழியால் பிறரை வேண்டோம் - வலிமையால் மற்றவரை நாடுகிலேம்; பணிப்பதே பாணி என்றான் - அடிகளின் அருளே தடையாகும் என்றான்.


1930 (இ - ள்.) பொரு அருமைந்தர் பொம்என உரறி - உவமை கூறுதற்கரிய (பதுமுகன் நீங்கலான) தோழர்கள் கடுக முழங்கி; திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் - திருமகள் தங்கிய பரந்த மார்பனாகிய சீவகனுடைய சேவடியை அடைந்த யாங்கள்; எரிஇருந்து அயரும் நீர்மை இருங்கதிர் - (வெப்பத்திற்கு யாம் ஆற்றேம் என்று) தீசோர்வுற்றிருந்து அயரும் தன்மையையுடைய ஞாயிறு ஆகவும்; ஏற்ற தெவ்வர் வருபனி இருளுமாக-எம்மை எதிர்ந்த பகைவர் பனியும் இருளுமாகவும்; எம் அடிகள் மதிக்க என்றார் - எம் அடிகள் மதித்திடுக என்றனர்.

1931 (இ - ள்.) செம்மல்! - செம்மலே!; முல்லை கார் தோன்றவே மலரும் - முல்லை கார் தோன்றினால் மலரும்; கமலம் வெய்யோன் தேர் தோன்றவே மலரும் - தாமரை ஞாயிற்றின் தேரைக் கண்டால் மலரும்; மாமன் உன் சீர்தோன்றவே மலரும் - (அவ்வாறே) நின் மாமன் உன்னுடைய சீர்தோன்றிய பொழுதே மலரும்; சென்று அவன் சொல்லினோடே பார்தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள் - (ஆதலால்) நீ அவனிடத்தே சென்று அவன் மொழிப்படியே உலகம் நின்னாலே விளங்க, நிலை பெற்று நின்ற பகையைக் கொல்வாயாக என்றாள் விசயை.

1932(இ - ள்.) அடிகள்! - அடிகளே!; நன்று - கூறியது நல்லது; அப்பொருளே வலித்தேன் - நீர்கூறிய பொருளையே யானும் துணிந்தேன்; மற்று - இனி; நாளைச் சென்று - நாளைக்குப் போய்; அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி - இராசமாபுரத்தே எம் சுற்றத்தார்க்கு மட்டும் யான் உயிருடன் இருப்பதை அறிவித்துவிட்டு; அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் - அன்றையத்தினமே அடியேன் மாமனிடம் வந்து சேர்வேன்; வென்றிக் களிற்றானுழை நீம் செல்வது வேண்டும் என்றான் - வென்றிக் களிற்றையுடைய மாமனிடம் நீர் செல்லுதல் வேண்டும் என்று சீவகன் கூறினான்.

1933
(இ - ள்.) வல்வில் மைந்தன் காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி - வலிய வில்லேந்திய சீவகன் காற்றைப் போலச் செல்லும் குதிரைகளின் மேற் படைகளைக் காவலிட; வேல் தைவந்தன்ன நுதி வெம்பரல் கானம் முன்னி - வேலைத் தொட்டாற்போன்ற நுனிகளையுடைய கொடிய பரல்களையுடைய காட்டின் வழியே செல்ல எண்ணி; நூற்றைவரோடு நுதி நடந்தாள் - நூற்றைந்து மகளிருடனே (மகன் செல்வதற்கு) முன்னே சென்றாள்; ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினான் - (பிறகு) ஆற்றலையுடைய படைகளுடன் தான் செல்லவேண்டிய வழியிலே செல்லத் தொடங்கினான்.

1934 (இ - ள்.) மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் - மணத்திற்கு இடனாகிய மணிகளையுடைய பெரிய மலைபோலும் மார்பனாகிய சீவகன்; வான் கண் நின்று - வான் தன்னிடத்தே மாறாது பெய்தலின்; எத் திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவா - எத் திசையினும் பொருந்தி நீர்ப்பெருக்குக் குறையாத; குன்றும் - குன்றையும்; குளிர் நீர்த்தடம் சூழ்ந்தன கோலயாறும் - குளிர்ந்த நீரையுடைய குளங்களைச் சூழக் கொண்ட அழகிய யாற்றையும்; சென்று - கடந்து; அப் பழனம் படப்பை புனல்நாடு சேர்ந்தான் - அவ் வயல்களையும் தோட்டங்களையும் நிரையும் உடைய அந்த ஏமாங்கதத்தைச் சேர்ந்தான்.

1935(இ - ள்.) காவின்மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - காவிலுள்ள மணமலர்கள் நெகிழ்ந்த மணமும்; வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும் - பொய்கையில் திரளாகிய மலர்கள்விடுத்த மணமும்; பூவிரி கோதையர் புனைந்த சாந்தமும் - மலர் நிறைந்த மாலைமகளிர் அணிந்த சந்தன மணமும்; ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்த - வில்வல்லானுக்கு எதிரெதிராக விருந்தூட்டின.

1936 (இ - ள்.) புனை மணிப் பொன் செய் பூணினான் - புனைவுற்ற மணிகள் இழைத்த பொன்னணிகலமுடையான்; கரும்பின் மேல் தொடுத்த தேன் கலிகொள் தாமரைச் சுரும்பின் வாய்த் துளித்தலின் - கரும்பினிடத்து வண்டுகளால் வைக்கப்பட்ட தேன், ஆரவாரமுடைய, தாமரை மலரிலுள்ள சுரும்பின் வாயிலே துளித்தலின்; துவைத்த வண்டொடு திருந்தியாழ் முரல்வது - ஒலித்த வண்டுகளோடு சுரும்புகள் யாழ்போல முரலுவதாகிய; ஓர் தெய்வப் பூம்பொழில் பொருந்தினான் - ஒரு தெய்வத்தன்மை பொருந்திய மலர்ப்பொழிலிலே தங்கினான்.

1937 (இ - ள்.) விலங்கு பொறை உயிர்த்தன - குதிரை முதலியன சுமத்தலைவிட்டு இலைப்பாறின; பொன்செய் மாமணிச் செறிகழல் இளைஞரும் செல்லல் நீங்கினார் - பொன்னாற்செய்து மணிகளிழைத்த வீரக்கழலணிந்த வீரரும் வழிநடை வருத்தம் நீங்கினார்; நாம வேலினாற்கு - அச்சந்தரும் வேலேந்திய சீவகனுக்கு; நறைவிரி கோதையர் அறுசுவை நால்வகை அமுதம் ஆக்கினார் - தேன் பொருந்திய கோதையையுடைய மகளிர் அறு சுவையுடைய நால்வகை யுண்டியைச் சமைத்தனர்.

1938(இ - ள்.) கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும் புட்டில் - கருப்புக் கட்டியுடனே கலந்த அரிசியும் வெந்த கொள்ளும் கலந்த புட்டிலை; புரவிக்கு வாய்ச் செறித்தனர் - குதிரைகட்கு வாயிலே செறித்தனர்; அல்லவும் - மற்றைய எருது முதலியனவும்; நெட்டிருங் கரும்பொடு செந் நெல் மேய்ந்து - நீண்ட பெரிய கரும்பு வயல்களிலும் செந்நெல் வயல்களிலும் மேய்ந்து; நீர் பட்டன - நீரிலே ஆடினவாய்; வளநிழல் பரிவு தீர்ந்த - நல்ல நிழலிலே கிடந்து துன்பம் நீங்கின.

1939(இ - ள்.) குழிமதுக் குவளை அம் கண்ணி - குழியிலுள்ள, தேன் பொருந்திய குவளை மலர்க் கண்ணியையும்; வார்குழல் - நீண்ட குழலையும்; பிழிமதுக் கோதையர் - பிழியத்தக்க தேனையுடைய கோதையையும் உடைய மகளிர்; பேண - ஓம்ப; அழிமதக் களிறனான் இன்னமுது அயின்ற பின்னர் - மிகுந்த மதமுடைய களிறுபோன்ற சீவகன் இனிய உணவை உண்ட பிறகு; கழிமலர் கண்விழித்த - கழியிலுள்ள மலர்கள் கண் விழித்தன; கமலம் பட்ட - தாமரைகள் துயின்றன.

1940 (இ - ள்.) எரிமணி இமைத்தன - (அந்த அந்திநேரத்தில்) எரிபோன்ற மணிகள் ஒளிர்ந்தன; தீ புகை எழுந்த - இனிய அகிற்புகை எழுந்தன; புரிநரம்பு இரங்கின - முறுக்குற்ற நரம்புகள் ஒலித்தன; தீ குழல் புகன்ற - இனிய வேய்ங்குழல் இசைத்தன; திருமணி முழவமும் - அழகிய முழவமும்; செம்பொன் பாண்டிலும் - வெண்கலத் தாளமும்; அருமணியின் குரல் அரவம் செய்த - குதிரை மணியின் குரலுடன் ஒலித்தன.

1941(இ - ள்.) தெளித்த இன்முறுவல் - விளங்கிய இனிய முறுவலையும்; பவளம் செற்ற வாய் - பவளத்தை வென்ற செவ்வாயினையும்; களிக் கயல் மழைக்கணார் - களிப்பையுடைய கயல் போலுங் குளிர்ந்த விழியையுடைய மகளிர்; காமம் காழ் கொளீஇ - காமத்தே உறுதிகொண்டு; விளித்த இன் அமிர்து உறழ் கீதம் - பாடிய இனிய அமுதத்தை வென்ற இசையை; வேனலான் அளித்தபின் - காமன்னைய சீவகன் பாராட்டிய பிறகு; அமளி அம் சேக்கை எய்தினான் - படுக்கையாகிய தங்குமிடத்தை அடைந்தான்.

1942(இ - ள்.) தீ கரும்பு அனுக்கிய - இனிய கரும்பினை வென்ற; திருந்து தோள்களும் - அழகிய (மகளிர்) தோள்களும்; வீங்கு எழில் தோள்களும் - பருத்த அழகிய (சீவகன்) தோள்களும்; மிடைந்து - பிணைதலாலே; வெம்முலை பூங்குளிர் தாரொடு பொருது பொன் உக - விருப்பூட்டும் முலைகள் தண்ணிய மலர்த்தாருடன் பொருது பூண்கள் சிந்தும்படி; ஈங்கனம் கனையிருள் எல்லை நீந்தினான் - இவ்வாறு பேரிருளின் எல்லையைச் சீவகன் கடந்தான்.

( 54 )(இ - ள்.) கனை கதிர்க் கடவுள் கண் விழித்த காலை - மிகு கதிர்களையுடைய ஞாயிற்றால் உலகம் கண் விழித்தபோது; முருகவேளனான் - சீவகன்; நனை மலர்த் தாமரை நக்க வண்கையால் - தேனையுடைய தாமரை மலரை இகழ்ந்த வளவிய கையினால்; புனைகதிர்த் திருமுகம் கழுவி - ஒப்பனை செய்த கதிரனைய அழகிய முகத்தைக் கழுவி; முனைவனுக்குப் பூமழை இறைஞ்சினான் - இறைவனுக்குப் பூமழை பெய்து வணங்கினான்.

( 55 )(இ - ள்.) நாமவேலினான் - சீவகன்; நாட்கடன் கழித்தபின் - காலைக்கடன்களை முடித்தபிறகு; வாள் கடி எழில் நகர் வண்மை காணிய - ஒளியின் மிகுதியையும் அழகையும் உடைய இராசமாபுரத்தின் வளங்காணும் பொருட்டு; தோள் பொலி மணிவளைத் தொய்யின் மாதரார் - தோளிலே அழகுசெயும் மணிகளிழைத்த வளைகளையும் மார்பிலே தொய்யிற் கோலத்தையும் உடைய மங்கையர்; வேட்பது ஓர் வடிவொடு - விரும்பத்தக்கதாகிய ஒரு வடிவத்துடன்; விரைவின் எய்தினான் - விரைந்து சென்றான்.


56 (இ - ள்.) அலத்தகக் கொழுங்களி இழுக்கி - (சீவகன் கால்) இங்குலிகச் சேற்றிலே வழுக்கி; அம் சொலார் புலத்தலின் களைந்த பூண் இடறி - மகளிர் புலவியாற் களைந்தெறிந்த பூணிலே இடறி; பொன் இதழ் நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து - அழகிய இதழையுடைய நிலத்திலே சிந்திய மாலைகள் காலிலே சேரத் தொடரப்படுதலாலே; நீள்நகர் செலக் குறைபடாது ஓர் செல்வம் மிக்கது - அந்தப் பெருநகரம் செல்லத்தொலையாதிருப்பதாகிய ஒப்பற்ற செல்வத்திற் சிறந்திருந்தது.

57(இ - ள்.) கத்திகைக் கழுநீர் கமழ் கோதையர் - கத்திகையாகத் தொடுத்த கழுநீர் மலர்மாலையராகிய மங்கையரின்; பத்தியிற்படு சாந்து அணி வெம்முலை - ஒழுங்காகச் சாந்தணிந்த விருப்பூட்டு்ம முலை; சித்தியிற் படர் சிந்தையினாரையும் - சித்தியிலே செல்லும் சிந்தையை யுடையவர்களையும்; இத் திசைப் படர்வித்திடு நீர - இல்லறத்திலே செலுத்திவிடும் தன்மையை உடையவாயிருக்கும்.

58
(இ - ள்.) வஞ்சி வாட்டிய வாள்மின் நுசுப்பினார் - வஞ்சிக் கொடியை (மென்மையால்) வருத்திய ஒளிபொருந்திய மின்னிடையார்; பஞ்சி ஊட்டிய பாடகச் சீறடி - செம்பஞ்சியை ஊட்டிய பாடகம் அணிந்த சிற்றடியை; குஞ்சி ஊட்டிய மைந்தர் குழாம் அலால் - குஞ்சியிலே சூட்டிய மைந்தரின் திரள் அல்லது; இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லை - வட்டமாகிய மதிலின் இடம் எல்லாம் வேறு திரள் இல்லை.
( 59 )(இ - ள்.) மின்னின் நீள் கடம்பின் நெடுவேள் கொலோ? - மேனியின் ஒளியாலே நீண்ட கடப்பந்தாரானாகிய முருகவேளோ?; மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ? - பொருநதிய ஐங்கணையையும் நீண்ட கருப்பு வில்லையும் உடைய காமவேளோ?; என்னனோ? - யாரோ?; அறியோம், உரையீர் எனா - அறிகிலோம், நீர் அறிந்தால் உரைப்பீராக என்று; பொன் அம்கொம்பு அனையார் புலம்பு எய்தினார் - அழகிய பொற்கொடி போன்ற மகளிர் வருந்தினர்.

( 60 )(இ - ள்.) விண் அகத்து இளையான் அன்ன - வானகத்திலுள்ள முருகவேளைப் போன்ற; மெய்ப் பொறி அண்ணலை - உத்தம இலக்கணங்களையுடைய சீவகனை; கழிமீன் கவர் புள் என - கழியிலுள்ள மீனைக் கவர நோக்கும் மீன்கொத்திப் பறவை போல; வண்ணவார் குழல் ஏழையர் - அழகிய நீண்ட குழலையுடைய மங்கையரின்; வாள் நெடுங் கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்ற - வாளனைய நீண்ட கண்களெல்லாம் கவர்ந்து உண்கின்றன ஆயின.

( 61 )(இ - ள்.) புலா தலைத் திகழும் வைவேல் பூங்கழல் காலினானை - புலால் நாற்றம் தலையிலே பொருந்திய கூரிய வேலையும் பூங்கழலணிந்த காலையும் உடைய சீவகனை; நிலாத்தலைத் திகழும் பைம்பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி - நிலவு தன்னிடத்தே விளங்கும் பசிய பூணை ஒளிவிடும் மணி வடத்தோடே சுமந்து; குலாய்த்தலைக் கிடந்து மின்னும் - அவை குலவித் தலையிலே கிடந்து மின்னுகின்ற; குவிமுலை பாய - குவிந்த முலைகள் பாய; வெய்தாய்க் கலாய்த் தொலைப் பருகுவார்போல கலவியிலே வெய்தாய்ப் புலந்து அப்புலவி தீர்ந்து நுகர்வாரைப்போல; கன்னியர் துவன்றினார் - கன்னிப் பெண்கள் நெருங்கினர்.

(இ - ள்.) தேன் நெடுங் கோதை நல்லார் - தேனையுடைய நீண்ட கோதையுடைய மகளிர்; வேல் நெடுங் கண்கள் அம்புஆ - வேலனைய நீண்ட கண் அம்பாக; வில் படை சாற்றி - வில்லாகிய படையை அமைத்து; மைந்தனைத் தெருவில் எங்கும் எய்ய - சீவகனைத் தெருவிலே எங்கும் நின்று எய்துகொண்டிருக்க; மான் நெடு மழைக்கண் நோக்கி - மானின் நீண்ட குளிர்ந்த கண்போலும் கண்களையுடையாள்; வானவர் மகளும் ஒப்பாள் - விண்ணவர் மகளைப் போன்றவள்; பால் நெடுந் தீ சொலாள் ஓர் பாவை - பாலனைய பெருமைமிக்க இனிய சொல்லாளாகிய ஒருபாவை; பந்து ஆடுகின்றாள் - பந்தாடிக்கொண்டிருக்கிறாள்.

(இ - ள்.) குழல் மலிந்த கோதை மாலை பொங்க - குழலில் மிகுந்த கோதையும் மாலையும் பொங்க; வெங்கதிர்முலை - விருப்பமூட்டும் கதிர்த்த முலை மிசை; நிழல் மலிந்த நேர்வடம் நிழல் படப் புடைத்தர - ஒளி நிறைந்த அழகிய முத்துவடம் ஒளியுறப்புடைக்க; எழில் மணிக் குழை வில்வீச - அழகிய மணிகளிழைத்த குழை ஒளிவீச; இன்பொன் ஓலை மின் செய - இனிய பொன் ஓலை ஒளியை உண்டாக்க; அழல் மணிக்கலாபம் அம்சிலம்பொடு ஆர்ப்ப ஆடும் - நெருப்பனைய நிறமுடைய மணிகளால் ஆகிய கலாபம் அழகிய சிலம்புடன் ஆரவாரிக்கப் பந்தாடுகின்றாள்.

1953( 64 ) (இ - ள்.) அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை - அகங்கையாகிய அழகிய இடத்தில் ஐந்து பந்துகள் அமர்ந்தவை; மங்கை ஆட - மங்கை ஆடுதலாலே; மாலைசூழும் வண்டுபோல வந்து - மாலையைச் சூழும் வண்டுபோலக் கீழே வந்து; உடன் பொங்கி மீது எழுந்து போய் - உடனே பொங்கி மேலேழுந்து சென்று; பிறழ்ந்து பாய்தல் இன்றி - முறை குலைந்து வீழ்தலின்றி; செங்கயற்கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியும் - செவ்விய கயற்கண்ணும் புருவமும் கூடத்திரிந்து அழகு செய்யுமாறு திரியும்.

( 65 ) (இ - ள்.) மாலையுள் கரந்த பந்து வந்து கைத்தலத்த ஆம் - மாலையிலே மறைந்த பந்து வந்து கையிடத்திலாகும்; ஏலம் நாறு இருங்குழல் புறத்த - மயிர்ச் சாந்து மணக்கும் கருங்குழலின் புறத்தனவாகிய பந்துகள்; வாள் முகத்த ஆம் - ஒளி பொருந்திய முகத்தனவாக ஆகும்; நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம் - நூலைப் போன்ற இடைவருந்தத் தலையிலே சென்ற பந்து மார்பின் மாலையிலே திரும்ப வரும் ; மேலெழுந்த மீநிலத்த விரல கைய ஆகும் - மாலையின் மேலேபோய் உயர்ந்த பந்து மீண்டும் விரலிடத்தன, கையிடத்தன ஆகும்.

( 66 ) (இ - ள்.) மாதர் - அப்பெண்; வண்டும் தேனும் பாட - வண்டும் தேனும் தேனை நுகராமல் நின்றுபாட; மயிலின் பொங்கி - மயில் போலப் பொங்கி; எண்திசையும் கொண்டு நீங்கல் - எட்டுத்திசையினும் பந்தைக் கொண்டு உலாவுதல்; கோதை வேய்தல் - இடையிலே மாலை அணிதல்; குங்குமம் அணிந்து உராய் - குங்குமம் அணிந்து பரந்து; ஏணி ஏற்று இலங்க நிற்றல் - படிமுறையாக அடித்தல்; பத்தியின் மண்டிலம் வரப் புடைத்தல் - பத்தியுடன் தன்னைச் சூழ்ந்து வர அடித்தல்; இன்னணம் மைந்துற்றுப் பந்து ஆடும் - இந் நிலைமைகளிலே வலியுற்று இங்ஙனம் பந்தாடும்.

( 67 )(இ - ள்.) மைந்து உற்றுப் பந்தாடுவாள் - இங்ங்னம் வலிமையுற்றுப் பந்தாடுகின்றவளுடைய; வாள் நுதல் தந்து சுட்டி இட்ட சாந்தம் - ஒள்ளிய நெற்றியிலே கொண்டுவந்து சுட்டியாக இட்ட சாந்தும்; பணை முலையின் குங்குமம் - பருத்த முலையில் இட்ட குங்குமமும்; சுந்தரப்பொடி - சிந்துரப் பொடியும்; தெளித்த செம்பொன் சுண்ணம் - ஓட வைத்த பொற் சுண்ணமும்; வேரின் வார்ந்து - வியர்வையினாற் கரைந்தெர்ழுகி; முலையிடை இந்திர திருவில் நெக்கு உருகி என்ன - முலையிடையிலே இந்திர திருவில் நெகிழ்ந்துருகி ஒழுகினாற்போல; வீழ்ந்த - வீழ்ந்தன.

( 68 ) (இ - ள்.) நன்மணிச் சிலம்பினோடு கிண்கிணி நக - அழகிய மணிச் சிலம்பும் கிண்கிணியும் விளங்க; நகும் மின் - நகுகின்ற மின் போன்ற; பொன் மலர்ந்த கோதை பந்து ஒன்று; பொன்னணியுடன் மலர்ந்த கோதையாளின் பந்து ஒன்று; மலர்ந்த முல்லை மாலை நக்கி - மலர்ந்த முல்லை மாலையைத் தொட்டு; மிக்கு இறந்தெழுந்து - தன் வரையைக் கடந்து எழுந்து; பொங்கிப் போந்து பாய்ந்து - பொங்கி வந்து பாய்ந்து; வீதி புக்கு - தெரு விற்புகுந்து; மின் மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது - ஒளி மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது.

69 (இ - ள்.) மின்னின் நுண் நுசுப்பினாள் - மின் போன்ற நுண்ணிடையாளாகிய; போழ்ந்து அகன்ற கண்ணி - ஆவியைப் பிளந்து பரவிய கண்ணினாள்; அம்துகில் நெகிழ்ந்து சூழ்ந்து காசு தோன்ற - அழகிய ஆடை நெகிழ்தலின் இடையிலணிந்த மேகலையின் காசுகள் தெரிய; பூங்குழல் தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து - அழகிய குழல் தாழ்தலின் அதிலுள்ள கோதை பொங்கி விழுந்து; வெம் முலைகள் தைவர - வெவ்விய முலைகளைத் தடவிநிற்க; வீழ்ந்த பந்தின்மேல் விரைந்து - விழுந்த பந்தின் மேல் விரைந்து வந்து; பூங்கொடியின் நோக்கினாள் - மலர்க்கொடிபோல நோக்கினாள்.

1959( 70 )(இ - ள்.) மந்தார மாலை மலர் வேயந்து - மந்தார மாலையின் மலரை மொய்த்து; தீ தேன் மகிழ்ந்து கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாட - இனிய தேனைப் பருகி மகிழ்ந்து, காந்தாரம் என்னும் பண்ணை அமைத்துக் களிப்பையுடைய வண்டுமுரன்று பாடும்படி; பந்து ஆர்வம் செய்து குவளைக் கண் பரப்பி நின்றாள் - பந்தின்மேல் ஆர்வங் கொண்டு குவளை மலரனைய கண்களை நாற்றிசையிலும் ஓடவிட்டு நின்றவள்; செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள் - செந்தாமரை மலர்மேல் உள்ள திருமகளின் வடிவத்தைக் கொண்டு நின்றாள்.


1960-71(இ - ள்.) நீர் தங்கு திங்கள் மணிநீள் நிலம் தன்னுள் ஓங்கி - நீர் தங்கிய சந்திர காந்தக் கல்லாகிய நிலத்திலே வளர்ந்து; சீர் தங்கு கங்கைத் திருநீர்த் தண் துவலைமாந்தி - சிறப்புற்ற அழகிய கங்கை நீரின் குளிர்ந்த நீர்த் துளியைப் பருகி; கார்தங்கி நின்ற கொடி - பசுமை தங்கி நின்ற கொடி போல்வாள்; காளையைக் காண்டலோடு - (பந்தை நோக்குவாள்) சீவகனைக் கண்ட அளவிலே; பீர்தங்கிப் பெய்யாமலரின் பிறிது ஆயினாள் - பசலை பூத்துப பழம் பூப்போல வேறாயினாள்.

72(இ - ள்.) நீர் தங்கு திங்கள் மணிநீள் நிலம் தன்னுள் ஓங்கி - நீர் தங்கிய சந்திர காந்தக் கல்லாகிய நிலத்திலே வளர்ந்து; சீர் தங்கு கங்கைத் திருநீர்த் தண் துவலைமாந்தி - சிறப்புற்ற அழகிய கங்கை நீரின் குளிர்ந்த நீர்த் துளியைப் பருகி; கார்தங்கி நின்ற கொடி - பசுமை தங்கி நின்ற கொடி போல்வாள்; காளையைக் காண்டலோடு - (பந்தை நோக்குவாள்) சீவகனைக் கண்ட அளவிலே; பீர்தங்கிப் பெய்யாமலரின் பிறிது ஆயினாள் - பசலை பூத்துப பழம் பூப்போல வேறாயினாள்.

73 (இ - ள்.) என்றாள் நினைந்தாள் - என்று கருதிய அவள் இவ்வாறு நினைந்தாள்; இவ் வேட்கை வண்ணம் இது போலும் - காதல் வேட்கையின் தன்மை இவ்வாறு போலும்; சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கலாவது அன்றாய் - இறந்தே படினும் குரவர்க்குங் கூறத்தகுவது அன்றாய்; அரிதாய் - பொறுத்தற்கும் அரியதாய்; அகத்தே சுட்டு உருக்கும் வெந்தீ - உள்ளே நின்று சுட்டு உருக்குகின்ற கொடிய தீயாக இருந்தது; ஒன்றே உலகத்து உறுநோய் மருந்து இல்லது என்றாள் - இந்நோய் ஒன்றே உலகத்திலுள்ள நோய்களிலே வேறு மருந்தில்லாத நோயாயிருந்தது என்று கருதினாள்.

( 74 )(இ - ள்.) குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை - மகளிர்க்கு நிறை குறையாமல் நின்றால் ஒரு குன்றியளவும் காமம் இல்லை யாயிருந்தது; நெருப்பின் சுடும் காமம் உண்டேல் நிறை யாதும் இல்லை - நெருப்பெனச் சுடுகின்ற காமம் உண்டாயின் நிறை சிறிதும் இல்லையாயிற்று; பசப்புப் பறையாய் அறையும் என்று பகர்ந்து வாடி - (அதுவுமன்றி, அதனை மறைத்தாலும்) பசப்புப் பறைபோல் எடுத்துக் கூறுவதாயிருந்ததென்று கூறி வாடி; அறைவாய்க் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள் - ஒலியையுடைய கடல்போலப் பரவிய காமம் வருத்த நின்றாள்.

75(இ - ள்.) நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள் - (இவ்வாறு) உள்ளம் கலங்கி நிறையைப் போக்கி நின்றவளது; அம் செங்கழுநீர் அலர்ந்த மதிவாண் முகத்தே - அழகிய செங்கழுநீர் மலர் மலர்ந்த திங்களைப் போலும் ஒளியுறும் முகத்தே; வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க - பொய் கூறாதவன் தன் கண்ணாலே நோக்கினானாக; காம வெந்தீ - (அவள் எதிர் நோக்கினால் நிகழ்ந்த) கொடிய காமத்தீ; தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது - எளிமையை அவனுக்கு முதலிற் கொடுத்துப் பின்பு தலைமட்டங் கொண்டது.

76(இ - ள்.) பூ உண்ட கண்ணாள் புருவச் சிலை கோலி எய்ய பூப்போலும் கண்ணாள் புருவமாகிய வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பாலே எய்தலின்; ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்கொல் என்னா - அந்த அம்பாலே தாக்கப்பெற்ற நெஞ்சிற் புண்ணுக்கு இடும் மருந்து யாது என்று ஆராய்ந்து மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி - (வேறு மருந்து இன்மையின்) மாவடுவைப் போன்ற கண்களையுடைய அம் மங்கையைத் திரும்பவும் நோக்கி; கோவுண்ட வேலான் - பகையரசரை உண்ட வேலான்; குழைந்து ஆற்றலன் ஆயினானே (அவள் காதற் குறிப்பு நோக்கினாலே) குழைவுற்று ஆற்றாமையுடையனாயினான்.

77 (இ - ள்.) காமக் கொடு நோய் கனல்சூழ்ந்து - கொடிய காம நோயாகிய தீயினால் சூழப்பெற்று; உடம்பு என்னும் இவ் ஈமத்தினோடும் உடனே சுட - உடம்பு என்னும் விற்குடனே உயிரை முழுக்கச் சுடுதலின்; ஏகல் ஆற்றான் - போக வியலாதவனாய் ; தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல்தாதை - அகிற் புகையினால் நிறைந்த ஆடையணிந்த அல்குலாளின் தந்தையாகிய சாகரதத்தனின் ; பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான் - மலர் மாலைகள் மொய்த்திருந்த கடையின் மேல் வருத்தமுற்றிருந்தான்.

78 (இ - ள்.) நாவி நோய் செய்த நறுங்குழலாள் - புழுகுக்கு வருத்தம் உண்டாக்கிய நறுங் கூந்தலாளை; நீலக் காவி நோய் செய்த கருங்கயல் கண் பூங்கொடி - கருங்குவளையை வருந்திய கரிய கயற்கண்களை யுடையதொரு பூங்கொடியை; என் ஆவி நோய் செய்த அணங்கு - என் உயிரை வருத்திய தெய்வமங்கை ; என்று அறியாதேன்-என்றுரைத்து அறிவுகலங்கினேனை; மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லை - நெருங்கி நோய் நீங்க என்னுற்றனை என்று வினவுவார் இல்லையே!

79 (இ - ள்.) தௌ் நீர்ப் பனிக் கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை - தெளிந்த நீரையுடைய தண்ணிய சிறிய குளத்தே தேனுற மலர்ந்த குவளை போலும்; கண் நீர்மை காட்டி - கண்ணின் தன்மையைக் கொண்டு ; ஒரு நோக்கினின் - அதன் ஒரு நோக்கினாலே ; கடல்போல் அகன்ற என் உள் நீர்மை எல்லாம் கவர்ந்த - கடல்போலப் பரந்த என் உள்ளிருக்கும் அறிவையெல்லாம் கவர்ந்த ; பெண் நீர்மை மேல்நாள் பிறந்தும் அறியுமோ? - இத்தகைய பெண்தன்மை முன்னாளிலும் பிறந்தறியுமோ?

80 (இ - ள்.) கருங்குழலும் செவ்வாயும் கண்மலரும் காதும் அரும்பு ஒழுகு பூண் முலையும் - கரிய கூந்தலும் சிவந்த வாயும் மலர் போன்ற கண்ணும் காதும் அரும்பெனப் பொருந்திய பூண் அணிந்த முலையும்; ஆர் உயிர்க்கே கூற்றம் - என சிறந்த உயிருக்கே கூற்றமாகக் கொண்டு; விருந்தினராய் வந்தாரை வெற்றுடலாம் நோக்கு - புதியவராக வந்தவர்களை உயிர் நீங்கிய உடலாகும்படி நோக்குகின்ற ; பெருந்திருவி யார் மகள் கொல் ? - பெரிய செல்வி யாருடைய மகளோ?; பேர் யாது ஆம் கொல்லோ?- பெயர் யாதோ?


81 (இ - ள்.) வார் உடுத்த வெம்முலையை வண்டு ஆர் பூஙகோதையை - கச்சணிந்த வெம்முலையையுடைய வண்டுகள் நிறைந்த மலர்க் கோதையாளை; பேர் கொடுத்தார் பெண் என்றார் - பெயர் கொடுத்தவர் பெண்ணென்றனர்; கூற்றமே என்றிட்டால் - கூற்றம் என்று கூறுவராயின்; தார் உடுத்த நீள மார்பர் தம் உயிர்தாம் வேண்டுபவேல் - மாலையணிந்த பரந்த மார்பினார் தம் உயிரைத் தாம் விரும்புவரேல்; நீர் உடுத்த இந்நகரை நீத்திட்டு ஒழியாரோ? - நீர் சூழ்நத இந்த நகரத்தை விட்டுப் போகாரோ?

82 (இ - ள்.) பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடும் - பசிய கண்களையுடைய மணிகளிழைத்த மகர குண்டலமும் புதிய தோடும் ; திங்கள் முகத்து இலங்க - திங்களனைய முகத்திலே விளங்க ; செவ்வாய் எயிறு இலங்க - சிவந்த வாயிலே முறுவல் சிறிது விளங்க; கொங்கு உண் குழல் தாழ - மணமுற்ற கூந்தல் தாழ; கோட்டு எருத்தம் செய்த நோக்கு- சாய்த்த கழுத்தை வளைத்துப் பார்த்த பார்வை; எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே நோக்குமே-பார்த்த இடம் எங்கும் தோன்றாநின்றது.

83 (இ - ள்.) வாள் ஆர் மதி முகத்த - இவளுடைய ஒளி பொருநதிய திங்கள் முகத்திலே கிடக்கின்றவை; வாளோ - வாளோ?; வடுப்பிளவோ - மாவடுவின் பிளவோ?; தாள் ஆர் கழு நீரோ-தண்டையுடைய கழுநீரோ?; நீலமோ - நீல மலரோ?; தாமரையோ - தாமரை மலரோ?; நீள் வேலோ - நீண்ட வேலோ?; அம்போ - கணையோ?; நெடுங்கண்ணோ - நீண்ட கண்ணோ ?; கோளார்ந்த கூற்றமோ-கொல்லுதல் பொருநதிய கூற்றுவனோ?; கொல்வான் தொடங்கின - (எவையாயினும் என்ன?) கொல்லத் தொடங்கின !

84(இ - ள்.) மாதர் நலம் எய்துவது என்று ஆம்கொல் என்று சிந்தித்து - மங்கையின் இன்பத்தை அடைவது என்று கூடுமோ என்று எண்ணி; ஒன்றார்க் கடந்தான் புலம்பு உட்கொண்டிருத்தலோடும் - பகைவரை வென்றவன் வருத்தங் கொண்டு இருந்தபோது ; அன்றே குளிர் சாகர தத்தன் என்பான் - அற்றை நாளே தங்கிய சாகரதத்தன் என்பவன் ; அமைந்த அடர் பசும்பொன் ஆறு கோடி குன்றாமல் விற்றான் - மாற்றமைந்த தகட்டுப் பொன் ஆறு கோடியென்ற எண்ணிற் குறையாமல் விற்றான்.

85 (இ - ள்.) நாய்கன் - சாகரதத்தன் ; திருமல்க வந்த திருவே எனச் சேர்ந்து - செல்வம் வளர்க்க வந்த திருவே என்று (சிவகனை) அடைந்து ; செரு மல்கு வேலாய்க்கு - போரிற் பல்கிய வேலையுடைய நினக்கு ; இது இடம் என்று செப்ப - இவ்வில்லம் இருப்பிடம் என்று கூற; வண்டு உண்டு வரிமல்கி அறை மாமலர்க் கண்ணி மைந்தன் - வண்டுகள் தேனைப் பருகி வரியென்னும் பண்ணை இசைக்கின்ற கண்ணியை உடைய சீவகன் எரிமல்கு செம்பொன் இலம் மாமனோடு ஏறினான் - ஒளி மிகுந்த செம்பொன் மனையை மாமனுடன் அடைந்தான்.

86 (இ - ள்.) நம்பன்! சிறிதே இடைதந்து இது கேட்க - நம்பனே! சிறிது செவ்வி கொடுத்து இதனைக் கேட்க!; அம்பொன் நகருள் நாளும் அமைந்தேன் - இராசமாபுரத்தில் எப்பொழுதும் இருப்பேன் ; மற்று எனக்கு அமைந்தாள் - இனி எனக்கு வாழ்ககைத் துணைவியாக அமைந்தவள்; கம்பம் இலாதாள் - கற்பில் அசைவில்லாதவள் ; கமலைக்கு - ஆகிய கமலைக்கு, விமலை என்பாள் - விமலை என்னும் பெயரினாள்; செம்பொன் வியக்கும் நிறத்தாள் திருவன்ன நீராள் - நல்ல பொன்னும் வியக்கும் நிறத்தினாள், திருமகளனைய பண்பினாளாக,

87 (இ - ள்.) பூம்பாவை வந்து பிறந்தாள் - பூம்பாவை பேன்றாள் வந்து பிறந்தாள்; அப் பிறந்த போழ்தே - அப்படிப் பிறந்த பொழுதே; ஆம்பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் - ஆகும் பகுதியின் யாவையும் அறிந்த கணிகள் அன்று பிறந்த குறிப்பு எழுதிவிட்டனர் ; தூம்பு யாதும் இல்லாக் குளம் போன்றது என் தோம் இல் பண்டம் -(அப்பொழுதிருந்தே) போகும் வழி ஏதும் இல்லாத குளம் போல நிறைந்தது என் குற்றமில்லாத பண்டம்; இது கூம்பாத செல்வக் கொடியே - இதுவும் நினக்குக் குறையாத செல்வம் வருவதற்குரிய ஒழுங்கேயாகும்; இது கேள் என்றான் - இது கேள் என்று அக்கணி கூறினான்.

88 (இ - ள்.) மங்கைக்கு உரியான் கடைஏறும் - இம்மங்கைக்குத் தக்கவன் நின்கடையில் வந்து அமர்வான்; வந்து ஏறலோடும் - வந்து அமர்ந்த வுடனே; வங்கம் நிதியம் உடன் வீழும் - மரக்கலத்திலே ஈட்டப்பட்ட செல்வம் ஒரு சேர உன்கடையில் தங்கம் ; அன்றி வீழாது-இங்ஙனம் அன்றிப் பொருள் தங்காது; எங்கும் தனக்கு நிகரில்லவன் ஏற்ற மார்பம் - எங்கும் தனக்கு ஒப்பற்ற அவனுடைய தகுதியான மார்பமே; நங்கைக்கு இயன்ற நறும் பூவணைப் பள்ளி என்றான்-விமலைக்குப் பொருந்திய மணமலர் நிறைந்த அணையாகிய சேக்கை என்று கணி கூறினான்.

89 (இ - ள்.) வீழா நிதியும் உடன் வீழ்ந்தது - (அவ்வாறே) வராத செல்வமும் இன்று சேர வந்தது ;ஏழாண்டின்மேலும் இரண்டு இரண்டு ஆண்டு எய்தி நின்றாள்- இவளும் பதினொன்றைக் கடந்து பன்னிரண்டாவது ஆண்டைப் பெற்று நின்றாள்; வில்வ லாய்க்கே ஊழாயிற்று - வில்வல்லானாகிய நினக்கு நல்வினையிருந்தது; ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி - நுடங்கும் இடை குறையும்படி உருவங்கொண்டு பருத்து; சூழ்ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் - சூழ்ந்த ஆரத்தைத் தாங்கின முலையாளின் நலத்தைத் தழுவுக என்றான்.

90 (இ - ள்.) ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடி தானே வந்து வீழ்ந்த தன்மைபோல; ஏந்தலைத் தேற்றினான் - (நமக்கும் இது வந்தது என்று கருதும்படி அவன்) சீவகனை இவ்வாறு கூறித் தேற்றினான்; திருமா நலம் செவ்வனே தோற்ற மாதரும் - அழகாகிய பெரிய நலத்தை முற்றும் இழந்த விமலையும்; தோன்றலைக் காண்டலும் தனது ஆவியும் தாங்கினாள் - சீவகனைக் கண்ட அளவிலே தன் உயிரையும் போகாமல் தடுத்தாள்; ஆற்றினாள் - தன் தந்தை அவனுக்குக் கூறியதைக் கேட்ட அளவிலே ஆற்றுவதுஞ் செய்தாள்.

91(இ - ள்.) அம் பொன் கொம்பு அனையாளையும் - அழகிய பொற்கொடி போன்றவளையும்; வார்கழல் செம்பொன் குன்று அனையானையும் - கட்டிய கழலையுடைய பொன்மலை போன்றவனையும்; பைம்பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழு - புதிய பொன்னாலமைத்த பெரிய மனையிலே பல இயங்களும் முழங்கா நிற்க; சீர் பெற - சிறப்புற; இம்பர் இல்லது - இவ்வுலகில் இல்லதாகிய; ஓர் இன்பம் இயற்றினார் - ஒப்பற்ற மணத்தைப் புரிந்தனர்.

92 (இ - ள்.) கட்டில் ஏறிய காமரு காளையும் - கட்டிலில் அமர்ந்த விருப்பம் வருதற் கான காளையும்; மட்டு வாய் அவிழ் மாமலர்க் கோதையும் - தேன் பொருந்திய வாய் மலர்ந்த பெருமை பொருந்திய மலர்க் கோதையாளும்; விட்டு நீங்குதல் இன்மையின் - விட்டு நீங்கி நுகரும் தன்மை இல்லாமையால்; வீவு இலார் - கெடுதல் இல்லாதவராய்; ஒட்டி ஈருடம்பு ஓர் உயிர் ஆயினார் - மனம் ஒன்றி ஈருடம்பும் ஓருயிரும் என ஆயினார்.

93 (இ - ள்.) நிலவு வெண் கதிர் நீர்மைய பூந்துகில் - நிலவு போல வெண்கதிர் பரப்பும் தன்மையுடைய அழகிய ஆடை; கலவம் கண் புதையாது - மேகலையை மறையாமல்; கனற்றலின் - தானே நெகிழ்ந்து அவனைக் கனற்றுவதாலே; புலவு வேற் கண்ணினாள் முலைப் போகம் - புலால் கமழும் வேலனைய கண்ணினாளின் முலைப்போகமானது; உலகம் மூன்றும் உறுவிலைத்து என்ப - மூன்றுலகையும் பெறுகின்ற விலையுடையது என்பர்.

94 (இ - ள்.) தேன் அவாம் கமழ் கண்ணியும் - வண்டுகள் விரும்பும் மணங்கமழ் கண்ணியும்; தெவ்வர் தம் ஊன் அவாம் கதிர்வேல் உறு காளையும் - பகைவருடைய ஊனை விரும்பும் கதிர் வேல் கைக்கொண்ட காளையும்; கான் அவாம் கடிநாறும் மென்பள்ளிமேல் - கானம் விரும்பும் மணங் கமழும் மெல்லிய பள்ளியின் மேல்; வான் அவாம் வகையால் வைகினார்கள் - விண்ணும் விழையும் வகையில் இன்பம் நுகர்ந்தனர்.

95 (இ - ள்.) வெண்மதி நெற்றி தேய்த்து - வெண்திங்களின் தலை தேய்த்தலின்; விழுத் தழும்பு இருப்ப நீண்ட - சிறந்த தழும்பு இருக்கும்படி நீண்ட; அண்ணல் நல்மாடத்து அங்கண் -நீண்ட அழகிய மாடத்திலே; அகில்புகை அமளி ஏறி - அகிற் புகையுண்ட அணையிலே அமர்ந்து; பண் அமை மகரவீணை நரம்பு உெரீஇப் பாவை பாட - பண்ணமைந்த மரக யாழிலே நரம்பினைத் தடவிப் பாவை போல்வாள் பாட; மண் அமைமுழவுத் தோளான் - மண்ணுதலமைந்த முழவினைப் போன்ற தோளினான்; மகிழ்ச்சியுள் மயங்கினான் - இன்பக் களிப்பிலே மயங்கினான்.

96 (இ - ள்.) இன்னரிச் சிலம்பொடு ஏங்கிக் கிண்கிணி இகலி ஆர்ப்ப - இனிய பரல்களையுடைய சிலம்புடன் ஒலித்துக் கிண்கிணி மாறுபட்டு ஒலிப்ப; பொன் அரி மாலை தாழ - பொன்னரிமாலை தாழ்ந்திட; பூஞ்சிகை அவிழ்ந்து சோர - பூவையணிந்த முடி அவிழ்ந்து சோர்வுற; மின் இருங் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க - ஒளியை யுடைய பெரிய கலாபம் விம்மிப் பிறழ்ந்து ஒலிப்ப; வெம்பி - காம இன்பத்திலே அனன்று; துன்னருங் களி கொள் - கிடைத்தற்கரிய மகிழ்ச்சியைக் கொண்ட; காமக் கொழுங்கனி சுவைத்து விள்ளான் - காமமாகிய கொழுவிய கனியைச் சுவைத்துப் பகலெல்லாம் பிரியானாயினான்.

97(இ - ள்.) தொழித்து வண்டு இமிரும் கோதை - சிதறி வண்டுகள் முரலுங் கோதையாளின்; துணை முலை பூம்பட்டு அழித்து முள்க - துணை முலைகள் பூம்பட்டை அழித்து நீங்காமல் முயங்கலின்; மட்டு ஒழுகும் தாரான் - தேனொழுகும் மாலையான்; மணிவள்ளத்து ஆய்ந்த தேறல் - மணிகளிழைத்த கிண்ணத்திலே ஆராய்ந்த மதுவை; எழில் பொலி மாதர்க்கு ஏந்த - அழகினால் விளங்கிய விமலைக்கு ஏந்த; இனிதினின் நுகர்ந்து - இனிதாகப் பருகி; காமக் கொழித்திரை கடலுள் மூழ்கி - காமமாகிய கொழித்து இரைக்குங் கடலிலே மூழ்கி; கோதை கண் துயின்ற - கோதையின் கண்கள் துயின்றன.

98 (இ - ள்.) பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய - வெற்றிலையை மடித்துச் சீவகன் விமலைக்குக் கொடுத்தற்கு; பரந்து மின்னும் தூசு உலாம் அல்குல் தீண்ட - பரவி மின்னும் ஆடை உலாம் அல்குலைத் தீண்டின அளவிலே; ஏசுவது ஒன்றும் இல்லா இணைவட முலையினாட்கு - குற்றம் சிறிதும் இல்லாத வட மணிந்து இணைந்த முலையாட்கு; துயில் கண்கள் விழித்த தோற்றம் - துயின்ற கண்கள் மலர்ந்த காட்சி; வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும் - மணமுறும் சிறந்த குவளை (முன்பு அலருந் தன்மையின்றி) மெல்ல அலருந்தன்மையை ஒக்கும்.

99 (இ - ள்.) கங்குல்பால் புகுந்த கள்வன் இவன் என்று - இரவிலே புகுந்த கள்வன் இவனென்று கூறி; கதுப்பில் தாழ்ந்த தொங்கலான் முன்கை யாத்து - கூந்தலில் தங்கிய மாலையினால் அவன் முன்கையைக் காட்டி; நீ வந்தது சொல்லு என்ன - இனி நீ வந்த வேலையைக் கூறு என்று வினவ; நங்கை! யான் பசித்து வந்தேன் - நங்கையே! யான் பசியால் வந்தேன் (என்று கூற); எப்பொருள் நயப்பது என்றாட்கு - எப்பொருளை நீ விரும்புவது என்றாட்கு; அம் கலுழ் மேனியாய்! நின் அணிநல அமிழ்தம் என்றான் - அழகொழுகும் மெய்யினாய்! நின் அழகாகிய அமிழ்தம் முழுதும் என்றான்.

100 (இ - ள்.) செயிர்த்தவள் சிவந்து நோக்கி - (நின்னலம் என்றதனாற் ) சீற்றங் கொண்டவள் கண் சிவந்து பார்க்க; சீறடி சென்னி சேர்த்தி - அவள் சிற்றடியிலே தன் முடியை வைத்து; அயிர்ப்பது என்? - என்னை ஐயுறுதல் ஏன்?; பணிசெய்வேனுக்கு அருளிற்றுப் பொருள் அது என்ன - நின் ஏவல் செய்வேனுக்கு நீ அருளியது யாது ஒன்று அதுவே பொருள் என்ன; பயிர்ப்புஇல் பகட்டு எழில் மார்ப! - அருவருப்பை அறியாதபெருமை பொருந்திய அழகிய மார்பனே!; உயிர்ப்பதும் ஓம்பி - நீ இறந்துபடுதலையும் தவிர்த்து; ஒன்றும் உரையலை ஆகி - ஒன்றும் கூறாமல்; இப்பூம் பள்ளி வைகு என்றாள் - இந்த மலரணையிலே தங்குக என்றாள்.

101 (இ - ள்.) வெள்ளியிற் புனைந்த கோல விளக்கு - வெள்ளியாற் செய்த அழகிய விளக்கு; உள் இழுது உடைய வெம்பி - இழுது உடையும்படி தீ மிகுந்து எரிதலின்; உற்பல உருவு கொண்ட ஒளி வெறுவிதாக - அரக் காம்பலின் வடிவைக் கொண்ட ஒளி, விடியற்கால மாதலின் அவ்வொளி கெட; வள் இதழ்க் கோதை - வளவிய இதழையுடைய கோதையினாள்; வட்டிகை நுதியின் வாங்கி - துகிலிகை நுனியாலே வட்டிகைப் பலகையினின்றும் நீக்கி; பள்ளிமேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாள் - பள்ளியின் மேல் எழுதப்பட்ட பாவையாயினாள்.

102 (இ - ள்.) ஆரும் பேதுற - கூடியிருந்தோ ரெல்லோரும் பிரிவை நினைந்து வருந்த; மங்கையர் பண்ணிய மருதயாழ்குழல் - மங்கையர் இசைத்த மருதயாழும் குழலும்; இந் நம்பி நங்கையை இன்று பிரியும் என - இந் நம்பி இவளை இன்று பிரிவான் என்று; அங்கு அதற்கு இரங்கின - அங்கே அதற்காக இரங்கின போன்றன; கலங்குல்போய் நாள் கடன் கழிந்தது - இரவு விலகக், காலைக்கடனும் முடிந்தது.


103 (இ - ள்.) அலங்கல் வேலினான் - மாலையணிந்த வேலினான். ஏந்து பூங்கோதைகள் ஏர்படத் திருத்தி - ஏந்திய பூங்கோதை அழகுறத் திருத்தி; சாந்து கொண்டு இளமுலை எழுதி - சந்தனங் கொண்டு இளமுலையிலே எழுதி; தையல் தன் காந்தள் அம்முகிழ் விரல் கையினால் பிடித்து - தையலின் காந்தளின் அழகிய அரும்புபோலும் விரலைக் கையினாற் பற்றி; அலங்கல் வேலினான் அவளுக்கு ஆய்ந்து இதுசொலும் - மாலையணிந்த வேலினான் அவளும் ஆராய்ந்து இதனைக் கூறுவான்.

104 (இ - ள்.) பூவினுள் தாழ் குழல் - பூவினுள் தங்கிய குழலையும்; பொன் செய் ஏந்து அல்குல் - மேகலையணைந்த அல்குலையும் உடைய; மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்! - மாந்தளிரை மயக்கும் மேனியினாய்!; ஏவினுள் தாழ்சிலை எறிந்த கோலின் - ஏவுந் தோழிற் குறைந்த வில்லெய்த அம்புபோல; காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன் - காவிலே என் தோழரைக் கண்டு மீளுவேன்.

105 (இ - ள்.) என்று அவன் உரைத்தலும் - என்று அவன் கூறினானாக; எழுது கண்மலர் நின்ற நீரிடை மணிப்பாவை நீந்தலின் - மை யெழுதிய கண் மலரில் ததும்பி நின்ற நீரிலே கண்மணிப் பாவை நீந்துதலின்; மாமணிக் குன்றனான் மன்றல் நாறு அரிவையைத் தெருட்டி - பெரிய மணிக் குன்றனைய சீவகன் மணங் கமழும் அவளைத் தெளிவித்து; கொடியவள் குழைய ஏகினான் - அவள் வருந்தத் தான் சென்றான்.



விமலையார் இலம்பகம் முற்றிற்று.

புதன், 1 ஜூன், 2011

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம்
13. கட்டுரை காதை

மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல் .

சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண் கண் தவள வாள் முகத்தி - சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையுமுடையாள்,

கடை எயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி -

கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி -

தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள்,

இடமருங்கு இருண்ட நீலமாயினும் வலமருங்கு பொன நிறம் புரையும் மேனியள் -

இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள்,

இடக்கை பொலம் பூந் தாமரை ஏந்தி னும் வலக்கை அம் சுடர்க் கொடுவாள் பிடித்தோள் - இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள்,

வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச் சிலம்பு அரற்றும் தகைமையள் - வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்),

கொற்கைக் கொண்கன் - கொற்கைத் நகரத் தலைவனும்,

குமரித் துறைவன் - குமரியாற்றுத் துறையை யுடையோனும்,

பொற்கோட்டு வரம்பன் - இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியிற் பொருப்பன் - பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய,

குலமுதற் கிழத்தியாதலின் -குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ; 13


அலமந்து - மயங்கி, ஒரு முலை குறைத்த திருமா பத்தினி - இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய,

அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன் முன்னிலைஈயாள் பின்னிலைத் தோன்றி - துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று,

கேட்டிசின் வாழி நங்கை என் குறை என - நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற ;
௧௩உரை 17
கண்ணகியின் வினா

வாட்டிய திருமுகம் வல வயின் கோட்டி - தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி்,

யாரை நீ என் பின் வருவோய் - என் பின்னர் வருகின்றோய் நீ யார்,

என்னுடை ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என -
என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப ;
18உரை 20

மதுராபதி சொல்லிய செய்திகள் தீவினை வந்த வகையைக் கூறுதல்

ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி இழாஅய் - அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன்,

மா பெருங் கூடல் மதுராபதி என்பேன் - மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன்,

கட்டுரை யாட்டியேன் - நினக்குச் சில சொல்லுதலுடையேன்,

யான் நின் கணவற்குப் பட்ட கவற்சியேன் - யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், பைந்தொடி கேட்டி - ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக ;
21உரை24

பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் -

பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ; தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக ;27உரை௨௮

மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை -

நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக ;

பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல்

காதின் மறை நா ஓசையல்லது - தன் காதுகளால்,

அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற வேதவொலியினைக் கேட்டறிந்த தல்லது.

யாவதும் மணி நா ஓசை கேட்டதும் இலாநீ-

ஒரு பொழுதும் மணியின் நாவோசையைக் கேட்டறியான்,


அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - அவன் தன்னடிகளைக் கையாற்றொழுது தலை வணங்காத பகையரசர் பழி கூறித் தூற்றப்பெறினல்லது,


குடி பழி தூற்றுங் கோலனும் அல்லன்-
குடிக்க பழி கூறித் தூற்றப்பெறும் கொடுங்கோலுடையனுமல்லன்

இன்னும் கேட்டி - மேலும் அவர் உயர்குணத்தைக் கேட்பாயாக ; ; 30உரை3௫


நல் நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில் பொருந்திய பார்வையானே,

மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு,


இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய யானை,

கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் -

கல்வியாகிய பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும்,

ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது -
நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண் தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது ;35உரை௪௧

கை குறைத்த கொர்ர்ர்ரவா

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் -
ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கொண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவி,

அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி - நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லையென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர்,

இன்று அவ் வேலி காவாதோ என-

இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த ;
42உரை௪௭

செவிச் சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் -
அச் சொல் காதினைச் சுடுவதாகிய ஆணியைப் போன்று புகைகின்ற தீ மூண்டு உள்ளத்தைச் சுடலானே,

அஞ்சி நடுக்குற்று - அச்சமும் நடுக்கமு மடைந்து,

வச்சிரத் தடக்கை அமரர் கோமான் - வச்சிரப் படை ஏந்திய பெரிய கையினையுடைய இந்திரனுடைய,

உச்சிப் பொன்முடி ஒளி வளை உடைIத்த கை குறைத்த செங்கோல் -
தலையிலுள்ள அழகிய முடியின்கண் ஒளி பொருந்திய வளையினை உடைத்த கையினைத் துணித்த செங்கோலினையும்,

குறையாக் கொற்றத்து - அதனாலாய குறைவுபடாத வெற்றியினையும் உடைய,

இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை - அரசர் குடியிற் பிறந்த இப் பாண்டியர்களுக்கு வழுவுதல் இல்லையாகும் ;48உரை௫௩


வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு பராசுரன் சேரனைக் காணச் சென்று, பார்ப்பனவாகை சூடி, மீளுதல்

இன்னும் கேட்டி நன்வாய் ஆகுதல் - இது நன்றாகிய மெய்யாதலை இன்னும் கேட்பாயாக ;(பெருஞ்சோறு பயந்த ...... பிற்படச் சென்று) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறநூலினை அறிந்து அதற்கேற்ப நிற்கும் செங்கோலையும் வீரவழியிலே ஒழுகிய நெடிய வாளினையும் உடைய,

புறவு நிறை புக்கோன் - புறாவின் பொருட்டுத் துலாம் புக்கோனும்,

கறவை முறை செய்தோன் - ஆவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டு முறை செய்தோனும் ஆய,

பூம்புனற் பழனப் புகார் நகர் வேந்தன் - பொலிவுற்ற நீரினையுடைய வயல்கள் நிறைந்த புகார் நகரத்தையுடைய சோழனது,

தாங்கா விளையுள் நன்னாடதனுள்- நிலம் பொறாத விளைவினையுடைய நல்ல சோணாட்டின்கண்,


வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - அறிவில் வல்ல பரா சரனென்னும் அந்தணன், பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை - பாரதப்போரில் பெருஞ் சோறளித்த திருந்திய வேலேந்திய பெரிய கையினையும்,

திரு நிலைபெற்ற பெருநாளிருக்கை - செல்வம் நிலைபெற்ற பெருமை மிக்க காலையோலக்கத் தினையுமுடைய,

குலவு வேற் சேரன் கொடைத் திறங்கேட்டு - விளங்கும் வேலினையுடைய சேரனது கொடையின் இயல்பினைக் கேள்வியுற்று,

வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடுவேல் சேரலன் காண்கு என -

வளவிய தமிழுணர்ந்த அந்தணனுக்குத் துறக்கத்துறைதலைத் தந்த உறுதியான வலி மிக்க நீண்ட வேலினையுடைய சேரனைக் காண்பேன் என்று கருதி,


காடும் நாடும் ஊரும் போகி - காடு நாடு ஊர் இவைகளைக் கடந்து,

நீடு நிலை மலையம்பிற்படச் சென்று -

உயர்ந்த நிலையினையுடைய பொதியின்மலைபிற்படும்படி போய்;55உரை௬௬

ஆங்கு - அவ்விடத்தே,

ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் வீடுபேற்றினை விரும்பும் கொள்கையினையும் இரண்டு பிறப்பினையும் உடையாராகிய, முத்தீச் செல்வத்து -

மூன்று வகைப்பட்ட தீயை வளர்க்குஞ் செல்வத்தோடே,

நான் மறை முற்றி - நான்கு மறைகளையும் முற்ற அறிந்து,

ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்தாகிய பெருமையுடைய வேள்விகளைச் செய்தலாகிய தொழிலையும் பேணும்,

அறு தொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க -


ஆறுதொழிலினையுடைய அந்தணர் பெறுகின்ற முறையை அப் பராசரனுக்கு வகைப்படுத்திக் கூற ; 66உரை70

நா வலங்கொண்டு - நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு,

நண்ணார் ஓட்டி - பகைவர்களை ஓடச் செய்து,

பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகையைச் சூடி,

ஏற்புற நன்கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன் - பொருத்தமுற நல்ல அணிகலங்களைப் பெற்றுத் தன் ஊர்க்கு மீண்டு செல்வோன் ;
71உரை௭௩


திருத்தங்காலில் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்தங்கால் என்பது ஊரே - செங்கோலினையுடைய பாண்டியனுடையதிருந்திய செயலினையுடைய அந்தணர்களது ஊர் திருத்தங்கால்என்பது,

அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து -

அவ்வூரின்கண் பசிய இலை தழைந்த அரசு நிற்கும் மன்றத்தின் கண்,

தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் -

தண்டினையும்கமண்டலத்தினையும் வெள்ளிய குடையினையும் சமித்தையும்,

பண்டச் சிறு பொதி பாதக் காப்பொடு - பண்டங்களையுடையசிறிய மூட்டையினையும் மிதியடியுடன்,

களைந்தனன்இருப்போன் - கீழே வைத்திருப்போனாகிய அவன் ;74உரை௭௯

காவல் வெண்குடை விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி -

குடிகளைக் காக்கும் வெண்கொற்றக் குடையினையும் அறநெறியால் உண்டாகி முதிர்ந்த வெற்றியையுமுடைய மேலோன் வாழ்வானாக,


கடற் கடம்பு எறிந்த காவலன் வாழி - கடலின்கண்ணே பகைவர் கடம்பினைத் தடிந்த மன்னவன் வாழ்வானாக,

விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி - இமயமலைக்கண் வில்லெழுதிய காவலன் வாழ்வானாக,

பூந்தண் பொருநைப் பொறையன் வாழி - பொலிவு பெற்ற தண்ணிய பொருநையாற்றினையுடைய பொறையன் வாழ்வானாக,

மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென - மாந்தரஞ் சேரலாகிய அரசன் வாழ்வானாக வெனச் சொல்ல ;
79உரை84 தமர் முதல் நீங்கி - தம் சுற்றத்தாரினின்றும் நீங்கி,

குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை ஆயத்து - குழலினையும் குடுமியினையும் நிரம்பாத சொல்லையுடைய சிவந்த வாயினையும் தளர்ந்த நடையினையும் உடைய கூட்டத்துடன்,

விளையாடு சிறாஅர் எல்லாஞ் சூழ்தர - விளையாடுகின்ற சிறுவர் யாவரும் அவ் வந்தணனைச் சூழ்ந்துகொள்ள ;
85உரை87

குண்டப் பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே,

என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு போமின் என - னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர் பெற்றுச் சென்மின் என்று அவன் கூற ; 88உரை89
90உரை94
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் - பெருமையமைந்த சிறப்பினையுடைய வார்த்திகன் என்பான் புதல்வனாகிய,

ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - தக்கிணாமூர்த்தி என்னும் பெயர்பெற்று வளர்ந்தவன்,

பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால் தோன்றும் சிவந்த வாயினையுடைய தன்னையொத்த இளையோர் முன்பு,

தளர்நா ஆயினும் மறை விளி வழாஅது உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத - தளர்வுறும் நாவினையுடையனாயினும் மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளத்து நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனோடு ஒருபடித்தாக ஓதுதலைச் செய்ய ;
95உரை௯௮

தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி,

முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும்,

அத் தகு புனைகலம் - அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும,

் கடகம் தோட்டொடு கையுறை ஈத்து - கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து,

தன் பதிப்பெயர்ந்தனன் ஆக - தன்னகரத்து மீண்டானாக ;

வார்த்திகனைச் சிறையிட, ஐயை கோயிலின் கதவம் திறவாமை
98உரை103
நன் கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅராகி - அத் தக்கிணாமூர்த்தி நல்ல அணிகலங்கள் புனைபவற்றையும் பூண்பவற்றையும் பொறாதவர்களாய்,

வார்த்திகன் தன்னைக் காத்தனர் ஓம்பி - வார்த்திகனைக் காவல் செய்து பற்றி, கோத் தொழில் இளையவர் கோ முறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன் என - அரசனேவல் செய்யும் காவலர் அரச நீதியில்லாது புதையலைக் கவர்ந்த பார்ப

்பான் இவனென்று கூறி,

இடுசிறைக் கோட்டத்து இட்டனராக - கள்வரை இடும் சிறைக் கண்ணே இவனை இட்டு அடைத்தனராக ;
104உரை108
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் - அங்ஙனம் சிறையிடப் பெற்ற வார்த்திகனுடைய மனைவியாகிய கார்த்திகை என்னும் பெயருடையாள்,

அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்திற் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் - மயங்கி ஏக்கம் கொண்டு நிலத்தில் வீழ்ந்தழுது கடவுளை வெறுத்துப் பூமியிற் புரண்டு வெகுண்டனள்,

அது கண்டு - அதனை யுணர்ந்து,

மை அறு சிறப்பின் ஐயை கோயிற் செய் வினைக் கதவம் திறவாது - குற்றமற்ற சிறப்பினையுடைய துர்க்கையின் கோயிற்கண் செயற்க

ுரிய தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற கதவம் திறவாதாயிற்று ;

வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை

108உரை112
ஆகலின் - ஆகையால்,

திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த நிலையினையுடைய கதவினை,

மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய பாண்டியன் கேட்டு மயக்குற்று,

கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ,

கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்ன - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின் எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ;

113உரை114
ஏவலிளையவர் காவலற் றொழுது - அரசனேவல் செய்யுங் காவலர் மன்னனை வணங்கி,

வார்த்திகற் கொணர்ந்த வாய் மொழியுரைப்ப - வார்த்திகனைக் கொண்டு வந்து சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் கூற ;
115உரை122
நீர்த்து அன்று இதுவென நெடுமொழி கூறி - இச்செயல் நீர்மையுடைத்தன்று என்று வார்த்திகனைப் புகழ்ந்து கூறி,

அறியா மாக்களின் முறை நிலை திரிந்த - அறிவில்லாத காவலரால் முறை செய்யும் நிலையினின்றும் வேறுபட்ட,

என் இறை முறை பிழைத்தது - என்னுடைய அரச நீதி தவறுற்றது,

பொறுத்தல் நும் கடன் என - அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும் என்று கூறி,

தடம் புனற் கழனித் தங்கால் தன்னுடன் - பெரிய நீர் சூழ்ந்த வயல்களையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே,

மடங்கா விளையுள் வயலூர் நல்கி - குறைவுபடாத விளைவினையுடைய வயலூரையும் கொடுத்து,

கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி - கார்த்திகையின் கணவனாகிய வார்த்திகன் முன்பு பெரிய பார் மடந்தைக்குத் தனது அழகிய மார்பினை அளித்து,

அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே - அந் நிலமடந்தையின் நீங்காத விருப்பத்தினையும் சிறிதளவு தணித்தனன் ;
123உரை௧௨௫

நிலைகெழு கூடல் நீள் நெடு மறுகின் - நிலைத்தல் பொருந்திய கூடல் நகரத்து மிக நீண்ட தெருக்களில் உள்ள,

மலை புரை மாடம் எங்கணுங் கேட்ப-மலையினையொத்து உயர்ந்த மாளிகைகள் எவ்விடத்தும் கேட்கும் வண்ணம்,

கலை அமர் செல்வி கதவம் திறந்தது - கலையை ஊர்தியாக விரும்பிய கொற்றவை கோயிலின் கதவு திறந்தது ;
126உரை132
சிறைப்படு கோட்டம் சீமின் - குற்றஞ் செய்தோரையும் பகைஞராய்ப் பற்றப்பட்டோரையும் காவற் படுத்தியிருக்கும் சிறைக்கோட்டத்தினைத் திறந்திடுமின்,

யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்மின் - எத்துணையாயினும் இறை இறுத்தற்குரிய மக்களது இறையினை விடுதலை செய்யுமின்,


இடுபொருளாயினும் படுபொருளாயினும் உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என - பிறர் வரவிட்ட பொருளாயினும் புதையற் பொருளாயினும் அவை எடுத்தார்க்கும் கொண்டார்க்கும் உரிமையுடையனவாம் என்று, யானை,


ஏருத்தத்து அணிமுரசு இரீஇக் கோல் முறை அறைந்த கொற்ற வேந்தன் - யானையின் பிடரில் அழகிய முரசினை இருத்தி அரச நீதியாகக் கூறிய வெற்றியினையுடைய மன்னன், தான் முறை பிழைத்த தகுதியும் கேள் நீ - நீதி தவறிய தகுதிப்பாட்டையும் நீ கேட்பாயாக ;


சோதிட வார்த்தை
133உரை137
ஆடித் திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து - ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து
குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று,

ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே,

உரை சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ;

பாண்டியன் முறை பிழைத்த காரணம்கோவலனது முற்பிறப்பு வரலாறு
138உரை146
கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழந்த கலிங்கநாட்டின்கண்,


தீம் புனற் பழனச் சிங்கரபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர் நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய கபிலபுரத்தின்கண்ணும்,


அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர்,


தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள் பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட நிலத்து எவ்விடத்தும்,


செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர் வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான் ;


147உரை151
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே சிறந்த அணிகலங்களைச் சுமந்து,

கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப் போந்து,

காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு - தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள் புக்கு,

அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகளை விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ;
152உரை157

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் - பசிய தொடியினையுடையாய் முற்பிறவியில் நின் கணவன்,

வெந்திறல் வேந்தற்குக் கோத் தொழில் செய்வோன் - வெவ்விய வலியமைந்த வசுவென்னு மரசனுக்கு அரச வினை செய்பவன்,

பரதன் என்னும் பெயரன் அக் கோவலன் - கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன்,

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் - கொல்லா விரதத்தினின்றும் விலகிய வெறுக்கப்படுவோனாதலான்,

ஒற்றன் இவன் எனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி - இவன் பகை மன்னன் ஒற்றனாவான் எனப் பிடித்துச் சென்று வெற்றி தரும் வேலினையுடைய தன் அரசனிடத்து காட்டிக் கொலை செய்த போது ;
158உரை166
கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங்காணாள் நீலி என்போள் - கொலைக்களத்துப் பட்ட சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் நிலையிடத்தைக் காணாளாய்.,

அரசர் முறையோ பரதர் முறையோ - அரசர்காள் வணிகர்காள் இது நீதியோ,

ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என - ஊரிலும் சேரியிலும் உள்ளீர் இது நீதியோ,
என்று கூறி,

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசல் இட்டு - மன்றத்திலும் வீதியிலும் சென்று யாவருமறிய வெளியிட்டு,

எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இது எனத் தோன்ற வாழ்த்தி - பதினான்கு நாள் சென்றபின் கணவனை வணங்கற்குரிய நாள் இதுவென்று கருதி மிகுதியாகப் போற்றி, மலைத்தலை ஏறி -மலை யுச்சியிடத்து ஏறி,

ஓர் மால் விசும்பு ஏணியிற் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் - ஒப்பற்ற பெரிய வானெல்லையில் கொலையிடத்துப்பட்ட தன் கணவனைக் கூடுவதாக நின்றவள் ;
167உரை170
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக என்று,

விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ;


மதுராபதியின்
171உரை172
உம்மை வினை வந்து உருத்தகாலை செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிற் செய்த தீவினை பயனளிக்க நேர்ந்த பொழுது அக் காலத்துச் செவ்விய உள்ளமிலராயினார்க்கு முன்செய்த நல்வினை சிறிதும் உதவாது ;

173உரை178
வார் ஒலி கூந்தல் நின் மணமகன் தன்னை - நீண்டு தழைந்த கூந்தால் நின் கணவனை, ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர்,

வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல் என - தேவர்களுடைய வடிவத்துக் காண்பதல்லது இவ்வுலக மக்களுடைய வடிவத்துக் காணுதல் இல்லையென்று, மதுரை மா தெய்வம் மாபத்தினிக்கு விதிமுறை சொல்லி அழல் வீடு கொண்ட பின் - மதுரைத் தெய்வமாகிய பெருமையுடைய மதுராபதி பெருமை மிக்க கற்புடைய கண்ணகிக்கு ஊழ்வினையின் தன்மையினைச் சொல்லித் தீயின் விடுதலையைக் கொண்ட பின்னர் ;


கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, திருச்செங்கோடு சேர்தல்
179உரை183
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என -

பொருந்திய கணவனைக் காணாததன் முன்னர் இருத்தலையுஞ் செய்யேன் நிற்றலையுஞ் செய்யேன் என்று கூறி,

கொற்றவை வாயிற் பொன் தொடி தகர்த்து - துர்க்கையின் கோயில் வாயிலில் பொலிவு பெற்ற தன் சங்கவளையலை உடைத்து,

கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு என - நகரத்துக் கீழ்த்திசைக்கண் வாயிலில் கணவனொடு புக்க யான் மேல்திசையிலுள்ள வாயிலில் தனியேனாய்ச் செல்கின்றேன் என்று சொல்லி ;
184உரை190
இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவு நீர் வையை ஒருகரைக் கொண்டு - இரவு இது பகல் இஃதென்று பகுத்தறியாது செயலற்று மயங்கி ஒலிக்கும் நீர் நிறைந்த வையை யாற்றின் ஒருகரையில் செல்லலுற்று,


ஆங்கு அவல என்னாள் அவலித்து இழிதலின் - அப்போது பதறி இறங்கலாற் பள்ளங்கள் என்று பாராள்,

மிசைய என்னாள் மிசைவைத்து ஏறலின் - தன் கணவனிடத்து உள்ளம் வைத்து ஏறலானே மேடுகள் என்று பார்க்கிலள்,

கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து - கடலின் நடுவிடத்தைக் கிழித்துக் கிரவுஞ்சம் என்னும் மலையின் நெஞ்சினைப் பிளந்து,

ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல் - அவ்விடத்தே அசுரரை வென்ற ஒளி விடும் தகட்டு வடிவாய நீண்ட வேலினையுடைய,

நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி - முருகனது குன்றத்து அடிவைத்து நடந்து உயரச் சென்று ;

கண்ணகி கோவலனோடு வான ஊர்தியில் செல்லுதல்
191உரை200
பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ் ஓர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி - மலர்ந்த கொம்புகளையுடைய வேங்கை மரத்தின் கீழே நின்று யான் ஒப்பற்றயுடையேன் என்று சொல்லி,

எழுநாள் இரட்டி எல்லை சென்ற பின் - பதினான்கு நாளளவு கழிந்த பின்னர்,

தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி - தான் கணவனைக் கண்டு தொழுதற்குரிய நாள் இதுவாகுமென்று அவனை மிகவும் வாழ்த்தி,


பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி - பெருமை மிக்க கண்ணகியின் பெரும் புகழைச் சொல்லி,

வாடா மா மலர் மாரி பெய்து - வாடாத பெரிய பூ மழையைச் சொரிந்து,


ஆங்கு அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்த - இந்திரன் தமராய வானோர் ஆங்கு வந்து துதிக்க, கான் அமர் புரி குழற் கண்ணகி தான் - மணந் தங்கிய புரிந்த கூந்தலையுடைய கண்ணகி,

கோ நகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் - மதுரையார் கொலை செய்த தன் கணவனாகிய கோவலனோடு தேவ விமானத்தில் ஏறித் துறக்கம் புக்கனள் என்க.


பொங்கர் - மரக்கொம்பு. குன்றத்துக் குறத்தியர் கேட்கத் தீவினையாட்டியேன் யான் என்றாள். ஏங்கி என்பது ஈண்டுச் சொல்லி என்னும் பொருட்டு ; சொல்லி ஏக்கமுற்று எனலுமாம். பதினாலாம் நாட் பகற்பொழுது சென்ற பின் என்பர் அரும்பதவுரையாசிரியர். பெயர் - புகழ் ; பெயரை மந்திரமாகச் சொல்லி என்றுமாம். நகர், ஆகுபெயர். அமரர்க் கரசன் தமர் என்றமையால் இந்திரனுக்கு விருந்தாயின ரென்பது பெற்றாம். கோவலன் தன்னொடு என்றமையால் அவனும் அவருடன் போந்தமை பெறப்படும்.இக் காதையுள் முன் நீலியின் செய்கை கூறிய விடத்தும் "எழு நாளிரட்டி.........வாழ்த்தி" என்னும் இரண்டடியும் வந்துள்ளமை காண்க. அமரர்க்கரசன் தமர் வந்து ஏத்திப் பெய்து ஏத்த எனவும், கண்ணகி தோன்ற வாழ்த்திக் கோவலன்தன்னொடு வானவூர்தி ஏறினள் எனவும் இயையும். மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகி பால் வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்துப் பாண்டியனுடைய செங்கோன்மையை விரித்துரைத்துக் கோவலன் கொலையுண்டமைக் கேதுவாகிய பழவினையின் உண்மையைத் தெரிவித்து, 'இற்றைக்குப் பதினாலாம் நாள் பகல் சென்றபின் தேவ வடிவிற் கணவனைக் காண்பாய்' என்று கூறிச் செல்ல, கண்ணகி வையைக்கரையின் வழியே சென்று திருச்செங்குன்றென்னும் மலையை அடைந்து வேங்கைமரத்தின்கீழே நின்று பதினாலாம் நாளெல்லை கழிந்து இந்திரன் தமர் வந்து ஏத்தக் கோவலனோடும் வானவூர்தி ஏறிச் சென்றாளென்க.








சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - 13. கட்டுரை காதை ௧ -26

சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - 13. கட்டுரை காதை


1. சடையிடத்து இளம்பிறை தங்கிய சென்னியினையும் குவளை மலர் போன்ற மை பூசிய கண்களையும் வெள்ளிய ஒளி பொருந்திய முகத்தினையுமுடையாள், கடைவாய்ப் பல் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற பவளம் போலும் சிவந்த வாயினை யுடையாள், தம்மிடத்து நிலவொளி பரந்த முத்துப் போன்ற பற்களையுடையாள்,



இடப்பாகம் இருளின் தன்மை கொண்ட நீல உருவாக இருப்பினும் வலப் பாகம் பொன்னுருப் போன்ற வடிவுடையாள், இடக்கையில் பொன்னிறமான பொலிவுற்ற தாமரை மலரை ஏந்தி இருப்பினும் வலக் கையில் அழகிய ஒளி விடுகின்ற மழுப்படையை ஏந்தினாள், வலக்காலின்கண் தொழிலமைந்த வீரக் கழலைக் கட்டியிருப்பினும் இடக்காலில் ஒப்பற்ற சிலம்பு ஒலிக்குந் தன்மையுடையாள் (அவள்), கொற்கைத் நகரத் தலைவனும், கொற்கைத் நகரத் தலைவனும், இமயமலையை தன் ஆட்சியின் வடவெல்லையாக உடையோனும், பொதியமலையையுடையோனுமாகிய பாண்டியனுடைய, குலத்தினை அடி தொடங்கியே காக்கும் உரிமை பூண்டோளாகலான் ;மயங்கி, இடமுலையைத் திருகி வாங்கிய அழகிய பெருமை மிக்க கற்புடையளாய,துன்பத்தாற் சுழல்கின்ற முகத்தினையும் ஆய்ந்து செய்த அணியினையும் உடைய கண்ணகியின் எதிரே நில்லாளாய்ப் பின்புறத்தே வந்து நின்று,நங்காய் என் குறையினைக் கேட்பாயாக என்று கூற ;தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து நோக்கி், என் பின்னர் வருகின்றோய் நீ யார், என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப ;அழகு செய்யும் அணிகலங்களை யுடையாய் நின் பொறுத்தற்கரிய துன்பத்தினை யான் அறிந்தேன், மிக்க சிறப்பினை யுடைய கூடற்கண் உள்ளேன் மதுராபதி என்னும் பெயருடையேன்,நினக்குச் சில சொல்லுதலுடையேன், யான் நின்கணவன் கொலையுண்டது காரணமாக அடைந்த கவலையை உடையேன், ஆயினும் நீ இதனைக் கேட்பாயாக ;பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ;